Chengalpattu

News April 24, 2024

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா

image

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல்.23) ஆஜரானார்.  வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி, யாஷிகா ஆனந்தை வரும் மே 3 அன்று ஆஜராக உத்தரவிட்டார்.

News April 24, 2024

சித்திரை மாத தேரோட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 10 நாள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் 7ம் நாள் உற்சவமும் தேர் வீதியுலா இன்று (ஏப்ரல்-23) தொடங்கியது. இந்த தேர் திருவிழாவில் செங்கல்பட்டு மட்டும் இல்லாமல் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

News April 24, 2024

செங்கல்பட்டு : கடும் பனிப்பொழிவு

image

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும், வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

News April 24, 2024

செங்கல்பட்டு: கும்பாபிஷேக விழா

image

வண்டலூர் சிங்கார தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஞான விநாயகர்,  முகாம்பிகை  ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிறகான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்தனர்.

News April 24, 2024

“புதிய அங்கன்வாடி மையம் அமையுமா?”

image

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிமேடு கிராமத்தில், அங்கன்வாடி மையத்தில், 12 குழந்தைகள் படிக்கின்றனர்.
மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20 பேர் பயனடைந்து வருகின்றனர்.
பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் சேதமடைந்தது. இதை சீரமைத்து புதிய அங்கன்வாடி மையம் திறாக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

News April 22, 2024

கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணி

image

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.மேலும், பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் கூடிய புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.

News April 22, 2024

யூ – டர்ன் பகுதியில் எச்சரிக்கை

image

சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, மேம்பாலத்தின் கீழ் திருப்பம் இல்லாததால், மாத்துார் சென்று ‘யூ- டர்ன்’ எடுத்து ஒரகடம் வந்து, இடது திரும்பி, வாலாஜாபாத் சாலை வழியே வாகனங்கள் சென்று வந்தன. கடந்த வாரம் இச்சாலையில், தனியார் ஹோட்டல் அருகே புதியதாக யூ -டர்ன் ஏற்படுத்தப்பட்டது. புதியதாக அமைக்கப்பட்ட யூ -டர்ன் குறித்து எச்சரிக்கை பலகை இல்லை.

News April 21, 2024

மாமல்லபுரம்: சந்தனக்கூடு விழாவில் A.R.ரகுமான்

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த உள்ள நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா அவர்களின் 351ம் ஆண்டு வருட கந்துரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா, இன்று(ஏப்.21) வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் திரைப்பட இசையமைப்பாளர் A.R.ரகுமான் கலந்துகொண்டார். மேலும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

News April 20, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து: ஒருவர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் பரனுர் அருகே திருச்சி மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜான் சம்பத் (46) என்பவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2024

திருக்கழுகுன்றத்தில் சித்திரை மாத தேரோட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (ஏப்ரல்.20) திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!