Chengalpattu

News May 17, 2024

செங்கல்பட்டு: கொத்தனார் பலியான சோகம்

image

படப்பை ஒரத்தூர் பகுதியை சேர்ந்த ஜோதி (49). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் அதே பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான வீடு கட்டுமான பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது, பலகையில் கட்டியிருந்த மின் விளக்கு தவறி கீழே விழுந்தது. அதை எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைபற்றிய மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 17, 2024

செங்கல்பட்டு: நள்ளிரவில் திருட்டு

image

கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சந்தேகப்படும்படி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தை சாலையில் தள்ளி கொண்டு சென்ற  கண்ட ரோந்து பணியில் இருந்த சேலையூர் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது செம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (27) மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த கணேஷ் (24) என்பதும் ரயில் நிலையம் வெளியே நிறுத்தி வைக்கபட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்துள்ளது.

News May 17, 2024

செங்கல்பட்டு: 10 மணி வரை… மிதமான மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கும் கிராமப்புறங்களில் மிதமான மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

செங்கல்பட்டு மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

முதலை கடித்து பராமரிப்பாளர் காயம்

image

வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐந்து வருடங்களாக தற்காலிக பணி செய்பவர் விஜய் (23). மூன்று மாதங்களாக சதுப்புநீர் முதலை பண்ணையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டவரை இன்று முதலை ஒன்று கடித்தது. இதில் பலத்த காயமடைந்த விஜய் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயின் தந்தை ஏசு நெருப்பு கோழி பராமரிப்பில் நிரந்தர பணியாளராக வேலை பார்கிறார்.

News May 16, 2024

செங்கல்பட்டு: அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை திருப்போரூர், மதுராந்தகம், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

சிமெண்ட் காரை விழுந்து 1 வயது குழந்தை பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அப்துல்லா தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் இளைய மகன் கபிலன்(வயது 1) நேற்று(மே 14) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வீட்டின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து மேலே விழுந்ததில் பரிதாமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 15, 2024

செங்கல்பட்டு அருகே கோர விபத்தில் 5 பேர் பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணித்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும், சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 2 பேரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5 ஆனது. சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 14, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மே.14) பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!