Chengalpattu

News May 27, 2024

செங்கல்பட்டு: பெண்ணிடம் 5 சவரன் வழிப்பறி

image

கிழக்கு தாம்பரம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் நித்யசுபா (49). தனது மகள் படிக்கும், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று கட்டணம் செலுத்தி, வீட்டிற்கு திரும்பினார்.
ஆஞ்சநேயர் கோயில் தெருவில் நடந்து சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், நித்யசுபா அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 26, 2024

சிறுமியிடம் அத்துமீறிய தாய் 

image

மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மனைவி பிரிந்து சென்றதால் மகேஸ்வரி என்பவரை திருமனம் செய்தார். மகேஸ்வரிக்கு ஏற்கனவே 12 வயதில் மகள் உள்ளார். மகேஸ்வரி சிவக்குமாரை பிரிந்து செந்தில்குமார் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து மகேஸ்வரியின் 12 வயது சிறுமிக்கு ஆபாச படங்களை அனுப்பி தவறாக வழிநடத்துவதாக கூறி சிவசங்கர் அளித்த புகாரில் செந்தில்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News May 26, 2024

செங்கல்பட்டு: 36 கிலோ குட்கா பறிமுதல்

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சன்னதி தெரு பகுதி செல்வராஜ் என்பவரின் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று சோதனை செய்ததில் 16 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் குடியானவர் தெருவில் மாரியப்பன் என்பவரது வீட்டில் இருந்த 36 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News May 25, 2024

செங்கல்பட்டு முட்டுக்காடு படகு குழாம் சிறப்பு!

image

செங்கல்பட்டில் உள்ள முட்டுக்காடு படகு குழாம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஒரு நீர் விளையாட்டு மையமாகும். இங்கு படகோட்டுதல், காற்றில் உலாவுதல், நீர் சறுக்கு விளையாட்டு, விரைவுப் படகுப் பயணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 1984ஆம் ஆண்டில் இந்தப் படகு வீடு திறந்து வைக்கப்பட்டது. இம்மையத்திற்கு ஒவ்வொரு வாரமும் 4,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

News May 25, 2024

அஞ்சல்துறை இன்சூரன்ஸ் முகவராக விண்ணப்பம் வரவேற்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல் துறை இன்சூரன்ஸ் முகவராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் செங்கல்பட்டு நகர், கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செய்யூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்பதாக செங்கல்பட்டு அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் சண்முகசாமி அறிவித்துள்ளார்.

News May 25, 2024

செங்கல்பட்டு: தம்பி அடித்து கொலை

image

 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள ஆக்கிணாம்பட்டு கிராமத்தில் நில தகராறில் தம்பியை அண்ணன் மற்றும் அண்ணனின் இரு மகன்கள் சேர்ந்து அடித்த கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்யூர் போலீசார் விசாரணை செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 24, 2024

காலை உணவு திட்டத்தில் 39000 மாணவர்கள் பயன்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த வட்டாரங்களில் 574 பள்ளிகள் மற்றும் அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில், 37 பள்ளிகள் என மொத்தம் 611 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை,தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் 39,002 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

News May 24, 2024

செங்கல்பட்டு: நண்பன் இறந்த துக்கம்

image

காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த நண்பர்கள் அலெக்ஸ் பாண்டியன் (22), சுதர்சன் (22) இருவரும் சென்னையில் வேலை செய்து வந்தனர். நேற்று அலெக்ஸ் பாண்டியன் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் குரோம்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. நண்பன் இறந்த துக்கம் தாளாமல் சுதர்சன் சட்டையை கழற்றி அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டுள்ளார் , சட்டை பாரம் தாங்காமல் கிழிந்ததால் உயிர் தப்பினார்.

News May 23, 2024

பயணியர் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

image

ஒரத்தி – திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில் சிறுதாமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலையில் கூட்டுச்சாலை பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
இது தற்போது உரிய பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 23, 2024

செங்கல்பட்டு: அரியர் வைத்ததால் தற்கொலை

image

செங்கல்பட்டு மாவட்டம்
மறைமலை நகர் அருகே கல்லூரி மாணவன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியது. பொத்தேரி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயின்ற
நிஜின் (21) என்பவர் அரியர் வைத்த காரணத்தினால் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!