India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய 475 முதுகலை ஆசிரியர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. அருண்ராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் என பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செங்கல்பட்டில் வேடந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது பறவைகள் சரணாலயம். புகழ்பெற்ற சரணாலயமான இங்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா என உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் வருகின்றனர். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். ஆண்டிற்கு 35,000 மேல் பறவைகள் இங்கு வந்து சென்றன.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் சைபர் கிரைம் குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் 253 சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து ரூ.93.28 லட்சம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வங்கி கணக்கு சம்பந்தமான ஆன்லைன் புகார் அளிக்க 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சாத்தமங்கலம் பாலாற்றங்கரையில் பழைய கற்சிற்பம் இருப்பதாக கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சென்ற ஆய்வாளர்கள் வயல்வெளியில் பாதி புதைந்த நிலையில் 5 அடி உயரம், 2.5 அடி அகலம் கொண்ட, பல்லவர் இறுதிக் காலமான 9 – 10 நூற்றாண்டு பெண் தெய்வமான அரிதான கொற்றை சிற்பத்தை கண்டெடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் கடந்த சில தினங்களாக முறையாக செயல்படவில்லை. செங்கல்பட்டை சுற்றியுள்ள மக்கள் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் -ல் பணம் செலுத்த முடியாமலும், பணம் எடுக்க முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைவர் தியாகராஜன் குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று (மே-28) சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தியாகராஜன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் அவரது குடும்பத்தினர் ஆசி பெற்றனர்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவிப்பின் பேரில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரிசூலம் தனியார் திருமண மண்டபத்தில் சுமார் 500 நபர்களுக்கு சம்பந்தி விருந்து நிகழ்ச்சி் நடைபெற்றது. இதில் இதில் ஏராளமான பொது மக்கள் அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ச்சி உடன் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்
தாம்பரம் காவல் ஆணையரக எல்லைப்பகுதியில் நேற்று இரவு வெவ்வேறு இடங்களில் 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக், மலையம்பாக்கத்தில் சூளை தொழிலாளி ராஜேஷ், குரோம்பேட்டையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் தாமஸ் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கொலை குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பாலையார் மடம் பகுதியில் தூய்மை பணியாளர் ராணி என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அவரது வீட்டில் திடிரென தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த பீரோ, சிலிண்டர், கட்டில் போன்ற பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு என்னும் பயிற்சி இன்று (மே.27) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அருண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.