Chengalpattu

News June 1, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை MIT கல்லூரியில் செயல்படும் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி ஆகியோர் உடன் இருந்தனர்.

News June 1, 2024

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் புது இயக்குநர்

image

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் புதிய இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர் நேற்று(மே 31) பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த இயக்குநர் வெங்கட்ராமன் ஓய்வு பெற்றதையடுத்து இவர் பதவி ஏற்றுக் கொண்டார். இவர் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 36 ஆண்டுகள் பணியாற்றி டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார்.

News June 1, 2024

செங்கல்பட்டு: சூட்டிங் ஸ்பாட்டான பாலாறு!

image

செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூர் பாலாற்று பகுதியில் ‘தக்லைஃப் ‘ திரைப்படத்திற்கான சூட்டிங் நடைபெற இருக்கிறது. நாயகன் படத்திற்கு பிறகு 36 வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்திற்காக பாலாறு பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 31, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து: இருவர் பலி 

image

செங்கல்பட்டு அடுத்த பாலூரைச் சேர்ந்தவர்கள் கங்காதரன் (52), அமுலு (46) தம்பதியினர். இவர்கள் இருவரும் நேற்று டூவீலரில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். திம்மாவரம் பகுதியில் சென்ற போது இவர்கள் டூவீலர் மீது  பின்னால் வந்த லாரி மோதி கங்காதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமுலுவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்  அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  

News May 31, 2024

குரூப் – 1 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

image

மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக குரூப்.1 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கடந்த 20 ஆம் தேதி துவங்கிய இந்த பயிற்சி வகுப்பு சிறந்த பயிற்றுனர்கள் மற்றும் இலவச வைபை வசதியுடன் செயல்பட்டு வருகிறது. 

News May 31, 2024

கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்ற ரவுடி கைது

image

கூடுவாஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று கூடுவாஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கூடுவாஞ்சேரி தேரடி மேட்டு தெருவைச் சேர்ந்த ரவுடி அப்பளம் தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News May 31, 2024

வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வருகை பதிவேடு பட்டா மாறுதல் நிராகரிப்பு மற்றும் பொதுமக்கள் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் காரணங்களை உடனடியாக அவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவுறுத்தினார்.

News May 31, 2024

அடகு கடையில் பணம் மற்றும் வெள்ளி திருட்டு

image

செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான அடகு கடை உள்ளது. 29ஆம் தேதி நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மருமகன் அவர்கள் ரூபாய் 10,000 ரொக்க பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர். 30ம் தேதி தகவல் அறிந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் தடயங்களை கைப்பற்றி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 30, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து: இளைஞர் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்தார். முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் (27) என தெரிய வந்துள்ளது. கடலூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி வரும் போது விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

News May 30, 2024

செங்கல்பட்டு: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் குளம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது. தகவல் அறிந்து சென்ற மேல்மருவத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!