India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் 70 வார்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு, பாலாறு குடிநீர் திட்டம், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ குடிநீர் திட்டம் வாயிலாக தினம் 123 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேற்கு தாம்பரத்தில் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் படாளம் என்ற இடத்தில் இன்று அதிகாலை மேல்மருவத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த ஏழு பேரில் பார்வதி, சச்சின் என்ற சிறுவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்காளாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, வாலாஜாபேட்டை ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேற்கு தாம்பரம்த்தில் 6 செ.மீட்டரும், திருகழுக்குன்றம் பகுதியில் 5 செ.மீட்டரும் மஹாபலிபுரம் AWS பகுதியில் 2 செ.மீட்டரும், தாம்பரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. வரும் 13ம் தேதி செங்கல்பட்டில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், 18ம் தேதி தாம்பரத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில், 19ம் தேதி திருப்போரூரில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், 20ம் தேதி பல்லாவரத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெறும்.
செங்கல்பட்டு மாவட்டம் பவூஞ்சூர் வார சந்தை வாரந்தோறும் புதன் கிழமை செயல்படும். நேற்று மாலை திடீரென சூரை காற்றுடன் அதிக அளவு மழை பெய்ததால் வார சந்தை கடுமையான பாதிப்பு அடைந்தது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே காய்கறிகளை வாங்கி சென்றனர் . திடீர் மழையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மறைமலைநகர் அருகே திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகள் சாமினி என்ற 9 வயது குழந்தை விழிப்புணர்வு பதாகைகளுடன் சாலையில் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் 9 வயது குழந்தையின் செயலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
Sorry, no posts matched your criteria.