Chengalpattu

News June 15, 2024

மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜூன்.21 ஆம் தேதி நடக்க இருப்பதாக முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஜூன்.20 ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமையில் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் எரிவாயு சம்பந்தமாக புகார்கள் தெரிவிக்கலாம்.

News June 15, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து: ஒருவர் பலி

image

திரிசூலத்தை சேர்ந்தவர் மகாராஜா (43). இவர் திரிசூலம் – மூவரசம்பட்டு சாலையில் உள்ள தனியார் கிரஷரில் மிஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் மது குடித்துவிட்டு கிரஷரிலேயே தூங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை லோடு ஏற்ற சென்ற லாரி இவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார்  டிரைவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 15, 2024

தாம்பரம்: அமைச்சர் ஆய்வு

image

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இன்று எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்.

News June 14, 2024

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

image

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் சென்னை – கன்னியாகுமரி விரிவாக்க பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இதற்காக, செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர், திம்மாவரம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் திம்மாவரம் ஒன்றிய குழு உறுப்பினர் அருள்தேவி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

News June 14, 2024

செங்கல்பட்டு: சொத்து தகராறில் வெட்டி கொலை

image

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஈ.பி லைன் மேன் உத்ராண்டம் (54) என்பவரை சொந்த தம்பி மகன் சுபாஷ் என்ற இளைஞர் பிரச்னை காரணமாக சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News June 14, 2024

10 நாட்களில் நடவடிக்கை – அன்பரசன்

image

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்பொழுது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அறிக்கை தர உள்ளார்கள். அந்த அறிக்கையை வைத்து அதற்கு ஏற்றவாறு பணிகளை செய்ய தயாராக உள்ளோம்.பிரச்சினைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ‌. 10 நாட்களுக்குள் அறிக்கை வாங்கப்பட்டு, அதற்கேற்றார் போல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

News June 13, 2024

செங்கல்பட்டு: மிதமான மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 13, 2024

கல்பாக்கம் அருகே இளைஞர் பலி

image

மேற்கு வங்கத்தை சேர்ந்த லட்சுமி லயோக் (25) என்ற இளைஞர் கடந்த 6 ஆம் தேதி கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதிக்கு ஒப்பந்த ஊழியராக பணி செய்ய வந்துள்ளார். அன்று இரவு வழி தெரியாமல் நத்தமேடு பகுதியில் ஒரு வீட்டை எட்டிப் பார்த்ததால் அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

News June 13, 2024

செங்கல்பட்டு: பரோட்டா சாப்பிட்டவர் மரணம்

image

பரோட்டா சாப்பிட்ட இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே நேற்று சுப நிகழ்ச்சியில் பரோட்டா சாப்பிட்ட மோகனசுந்தரம் (28) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உறவினர்கள் தனியார் மருத்துவமனை
கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இவர் ஏற்கனவே இருந்துவிட்டார் என தெரிவித்தனர்.

News June 13, 2024

செங்கல்பட்டில் வரும் 19ஆம் தேதி ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம், வரும் 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்காக, அனைத்து துறை அலுவலர்கள், அரசு அலுவலகங்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர், பாலுார், காட்டாங்கொளத்துார் பகுதி மக்கள், அனைத்து துறை சார்ந்த மனுக்களையும் இன்று முதல் வழங்கலாம்.

error: Content is protected !!