India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசுப்பள்ளி கட்டிடத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய இலவச லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னலை உடைத்து லேப்டாப்கள் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் அதே பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவர்களே அந்த லேப்டாப்களை திருடியது தெரியவந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (மார்ச்.27) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது எனவே மக்கள் பயன்படுத்திக்கொண்டு காவல் ஆய்வாளர்களுக்கு தங்களது இரவு நேர பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
1. அருள்மிகு கச்சபேஸ்வரர் கோயில் – திருகச்சூர்,
2. அருள்மிகு எல்லையம்மன் கோயில் – மதுராந்தகம்,
3. அருள்மிகு கந்தசாமி கோயில் – திருப்போரூர்,
4. அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோவில் – திருக்கழுக்குன்றம்,
5. அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் – செம்மஞ்சேரி.
மத்திய தொல்லியல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், ஆமூரில் நடக்கும் அகழாய்வில் கிடைத்த, 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமச்சின்னங்கள் வெளிப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஏற்கனவே, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளும், பல்லவர், சோழர் கால கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இப்பகுதியைச் சுற்றி ஆயிரக்கணக்கான இடங்களில் தொல்லியல் சின்னங்கள் கிடைக்கின்றன.
இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி +2 பயிலும் மாணவ, மாணவியருக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு மீதமிருந்த இலவச மடிக்கணினிகள், செங்கல்பட்டு அண்ணா மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் (மார்.25) அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டு 53 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 11 மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வீடியோ கால் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையதள மோசடி பற்றி புகார் தெரிவிக்க 1930 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் எனவும், கீழ்கண்ட மூன்று அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. 1. அறிமுகமில்லாத செல்போன் அழைப்புகளை ஏற்காதீர். 2 அறிமுகமில்லாத ரெக்கியூஸ்ட்களை ஏற்க வேண்டாம் 3. இணையதளங்களில் கால் அழைப்புகளை ஏற்காதீர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு நகராட்சியில், அறிஞர் அண்ணா அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 53 இலவச மடிக்கணினிகள் திருடு போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்களில் சிலர் இந்த மடிக்கணினிகளை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டசபையில் நேற்று (மார்ச்.25) அமைச்சர் கே.என்.நேரு, தாம்பரம் மாநகராட்சியில் ரூ.30 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.750 கோடி செலவில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், நந்திவரம் – கூடுவாஞ்சேரி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்துதல், செங்கல்பட்டு நகராட்சியில் புதிய பேருந்து நிலைய பணிகள், மறைமலைநகர் நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
Sorry, no posts matched your criteria.