Chengalpattu

News March 17, 2024

விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

image

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சி, கொளப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று மாலை கொளப்பாக்கத்திலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் “செப்டிக் டேங்க்” சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது விஷவாயு தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கிளம்பாக்கம் போலீசார் தேவராஜின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2024

நாடாளுமன்றத் தேர்தல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் 21 பறக்கும் படையினர், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள்,14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் தேர்தல் குறித்த புகார்களை தொலைபேசி மூலம் தெரிவிக்க 18004257088 ,27427412 &27427414 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News March 17, 2024

பயன்பாட்டிற்கு வந்தது குடிநீர் தொட்டி

image

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் தெற்கு பகுதி நான்காவது மண்டலம் 57 ஆவது வார்டு சிவசக்தி நகர் மற்றும் குறிஞ்சி தெருக்களில் குடிநீர் தொட்டிகளை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் நேற்று(மார்ச்.16) குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு வந்தது. 57 ஆவது வட்ட செயலாளர் ஐசக் முன்னிலையில் மண்டல குழு தலைவர். காமராஜர் திறந்து வைத்தார். 

News March 16, 2024

செங்கல்பட்டு :இந்தியா கூட்டணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

image

செங்கல்பட்டு பல்லாவரம் சுரபி மகாலில் நடைபெற்ற I N D I A கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் தாமோ அன்பரசன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, க.செல்வம் எம்.பி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

News March 16, 2024

செங்கல்பட்டு: அடையாளம் தெரியாத வாகன மோதி மான் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் இருந்து கூவத்தூர் செல்லும் சாலையில் தட்டம்பட்டு கிராமம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

News March 16, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!