India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன். அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று (1989) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு கட்சி மாறி அதிமுகவில் இணைந்து கட்சியில் அச்சரப்பாக்கம் சட்டமன்ற தனி தொகுதியில் (1991 To 95) சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ராமகிருஷ்ணன் இன்று (மார்ச்-24) காலமானார்.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய அருகே உள்ள சின்ன மேலமையூர் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சின்ன முத்துமாரியம்மன் கோவிலில் இன்று (மார்ச்-24) 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
வார இறுதி நாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நேற்றிரவு திருவண்ணாமலை செல்வதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். ஆனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இல்லாததால் தென் மாவட்டம் செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பிரியா நகர், அம்பிகா நகர், ராஜிவ் காந்தி நகர், காரணை புதுச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகளில் குப்பைகள் குவிந்தும் , கழிவுநீர் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வெயில் காலத்திலும் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம் கழிவுநீரை அகற்றி கொசு மருந்து தெளிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வீடுகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர்கள்,அரசு அனுமதியின்றி பனைமரத்தில் கள் இறக்கி விற்பனை செய்தவர்கள் என 3 பெண்கள் உட்பட 14 பேரை மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 150 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அடிவாரம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செங்கல்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் வீட்டில் இருந்து சுமார் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வினோத்தை கைது செய்தனர்
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, ஸ்ரீபெரும்புதூரில் DR வெ.ரவிச்சந்திரன், காஞ்சிபுரத்தில் வி.செந்தில்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காமராஜபுரம் சமூக நல கூடத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இப்தார் நேற்று ( மார்ச்- 23) மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாஹூர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக பொது செயலாளர் ஹாஜாகனி , துணை பொது செயலாளர் தாம்பரம் யாக்கூப் மாவட்ட அரசு தலைமை காஜி பஜ்லுல்ஹக் தாவூதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரு கருணை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மரகத தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மேடவாக்கத்தை சேர்ந்தவர் பாலு நேற்று தனது குடும்பத்துடன் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது காரில் சென்றுள்ளார். செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் பாலுவின் காரில் இருந்த “Fastag” ஸ்கேன் ஆகாததால் சுங்கசாவடி ஊழியர், பாலு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீடிரென சுங்கசாவடி ஊழியர்கள் பாலுவை தாக்கியுள்ளனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.