India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூடுவாஞ்சேரியில் கணினி பழுதுபார்க்கும் கடையின் பூட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைத்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 4 லேப்டாப்பை திருடிச் சென்றனர். இந்நிலையில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (29), திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த ரவி பாரதி (29), வண்டலூர் ஒட்டேரி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட 3 பேரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.
பல்லாவரம் மண்டலம் 17வது வார்டுக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக ரூபாய் 68 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் கல்வி வளர்ச்சி நிதியின் கீழ் நடைபெறும் இந்த பணியினை மாநகராட்சி ஆணையர் சி பாலச்சந்தர் ஐஏஎஸ் நேற்று (23ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை, மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் புயல் ‘டானா’ சின்னம் உருவானதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் பரவலாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வந்தால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஷேர் பண்ணுங்க
இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் அப் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாக வரும் பொய்யான விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் எனசெங்கல்பட்டு மாவட்ட சைபர் டிரைவிங் போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், விவரங்களுக்கு சைபர் கிரைம் இணையத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
பேரூராட்சி மற்றும் அருகில் உள்ள ஊராட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்து, புதிய நகராட்சிப் பகுதியாக தோற்றுவிக்க உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களின் பட்டியலில், திருப்போரூர் இடம்பெற்றுள்ளது. திருப்போரூர் பேரூராட்சியுடன், சுற்றுப்புற ஊராட்சிப் பகுதிகளை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை பரிசீலித்து வருகிறது. இதனால், புதிய நகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 75,000 பேருக்கு மேல் உயரும்.
வழக்குரைஞர்களுக்கு எதிராக சுற்றறிக்கை விட்டுள்ள தமிழ்நாடு டி.ஜி.பி. மீது உரிய நடவடிக்கை எடுத்து, மேற்படி சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் திரும்பபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்கம் (சி.பி.ஏ.) சார்பில் சங்கத்தின் தலைவர் ஆனந்தீஸ்வரன் தலைமையில், நீதிமன்ற நுழைவு வாயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர், மதன் என்பவரை தாக்கியதால் விசாரணைக்காக பெரும்பாக்கம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தில் அறுத்துக் கொண்டார். பதறிய போலீசார் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும்பாக்கம், வீரபத்திர நகரைச் சேர்ந்தவர் வினோ ஏட்வர்சிங். இவர், வீரபத்திரன் நகர் அருகே நடந்து சென்றபோது இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தற்போது தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக, பெரும்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சீர் முகமது (28), மேடவாக்கம் சிவகாமி நகர் பகுதியில் தங்கி அங்கேயே கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில், கட்டிட பணி செய்யும்போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பி அவர் மீது பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேடவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.