Chengalpattu

News March 28, 2024

தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்

image

புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று 505 பேருந்துகளும் நாளை 300 பேருந்துகளும் சனிக்கிழமை 345 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

செங்கல்பட்டில் துணை ராணுவ அணிவகுப்பு

image

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் நேற்று (மார்ச்.27) நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பை துவக்கி வைத்தார். இந்த அணிவகுப்பு மணிகூண்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வேதாச்சலநகர் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று  இராட்டினங்கிணறு பகுதியில் நிறைவு பெற்றது. 

News March 27, 2024

டி.ஆர்.பாலு செய்யாத திட்டங்களை நான் செய்வேன்

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் டி.ஆர்.பாலு மீண்டும் அவர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.டி.ஆர்.பாலு செய்யாத பல திட்டங்களை நான் வெற்றி பெற்றால் செய்வேன் என  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் இன்று தெரிவித்தார். 

News March 27, 2024

செங்கல்பட்டு: சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

ஸ்ரீபெரும்புதூா் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் சரவணன் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

News March 27, 2024

தமாகா வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் மிதிவண்டியில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-27) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News March 27, 2024

தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படை வீரர்கள்.

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் நாடளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று தெரிவித்தார் எனவே இதில் சேர விருப்பமுள்ளவர்கள் தாம்பரம் ரயில் நிலையம் எதிரே உள்ள ஜீவா வணிக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் படை வீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

கழுத்தில் தாலி அணிந்தபடி வேட்பு மனு தாக்கல்

image

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தாலி அணிந்தபடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் கடல்நீரில் மதுபானத்தை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

News March 27, 2024

சிற்பக்கலை கல்லூரியில் தீ விபத்து

image

மாமல்லபுரம் இ.சி.ஆர் சாலையில் அரசு கட்டிட கலை மற்றும் சிற்ப கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் இருந்த காய்ந்த புற்களால் நேற்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த விபத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த புற்கள், செடி, கொடிகள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின.

News March 27, 2024

ரங்கநாதர் கோவிலில் பங்குனி விழா இன்று துவக்கம்

image

பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர விழா இன்று முதல் ஏப் 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலாவும் 5 ஆம் நாளான மார்ச் 31 இல் கருட சேவை, 7 ஆம் நாள் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

News March 26, 2024

செங்கல்பட்டு: கடலில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் காவல் நிலைத்து உட்பட்ட பனையூர் கிராமத்தில் இன்று (மார்ச்-26) நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற பதினோராம் வகுப்பு படிக்கும் பிரவீன் மற்றும் முகமது முசாதிக் ஆகிய 2 பேர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடலை கைப்பற்றி செய்யூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!