India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் , சென்னையில் இயங்கும் மண்டல வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் 16 இடங்களில் தானியங்கி வானிலை நிலையத்தை அமைக்கிறது. அதன்படி, மாமல்லபுரம், அரசு கட்டடம் மற்றும் சிற்பக் கல்லுாரி வளாகம், கூவத்துார் அடுத்த சீக்கினாங்குப்பம் , மார்க் சுவர்ணபூமி வளாகம், கேளம்பாக்கம் – வண்டலுார் சாலை, வி.ஐ.டி.,கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில், இந்நிலையங்களை தற்போது அமைத்துள்ளது.
மறைமலைநகர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகை கீழே விழும் நிலையில் அபாயகரமாக காட்சியளித்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை உருவாகியது. இந்நிலையில், இதனை கண்ட போக்குவரத்து காவலர் மணிகண்டன் உடனடியாக வழிகாட்டி பலகையை சரி செய்தார்.
அவருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவரது நண்பர் கவுசிக் இவர்கள் இருவரும் சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தனர். நேற்று காலை வழக்கம்போல் இருவரும் டூவீலரில் கல்லூரிக்கு சென்றனர். பல்லாவரம் மேம்பாலம் அருகே சாலையில் எதிர் திசையில் பயணித்தனர். அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி ஆகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கவுசிக் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ‘ரெயின் ட்ராப் போட் ஹவுஸ்’ உள்ளது.கோடை விடுமுறை துவங்கப்பட உள்ளதால், சுற்றுலா பயணியரை கவரும் விதமாக, புதிய ‘டிஸ்கோ’ போட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நான்கு பேர் அமரும் இருக்கைகள் கொண்ட ‘டிஸ்கோ’ போட்டில் சவாரி செய்ய, 10 நிமிடத்திற்கு ரூ.2,400 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வேட்பாளராக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று வேட்பாளர் விரும்பி கேட்ட சின்னமான டம்ளர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம்,போக்குவரத்து, மதுவிலக்கு, உதவிகமிஷனர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விபத்தில் சிக்கிய வாகனங்கள், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன.
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் செல்லும் ஏராளமான கட்சியினரின் கார்களில் , கட்சிக் கொடிகளை அகற்றாமல் கட்சி நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர்.
அதேபோல், விலைஉ யர்ந்த கார்களின் முன்புறம் , துருப்பிடிக்காத இரும்பாலான முன் தடுப்பு கம்பி பொருத்தக்கூடாது என, நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டும், கட்சியினர் அதை பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதனை அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
கூடுவாஞ்சேரியில் இருந்து நேற்று மாலை விக்ரம் என்பவர் தனது காரில் பெருமாட்டுநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நந்திவரம் மலைமேடு சாலை அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனை மற்றும் ஹோட்டல் சுவரை இடித்து உடைத்துக்கொண்டு புகுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ரஞ்சித் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.