India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி 14 ஆவது வார்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்த 9 மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் சொந்த செலவில் விமானத்தில் பெங்களூர் அழைத்துச் சென்றனர். இதில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் விமானத்தில் சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் என்ற இடத்தில் கேரளாவில் இருந்து சென்னைக்கு டாரஸ் லாரியில் மரபிளைவுட் ஏற்றிச் சென்ற லாரி இன்று (மார்ச்-20) திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுனர் மற்றும் தீயணைப்பு துறையினர் வாகனத்தின் தீயை அணைத்ததால் பல லட்சம் மதிப்புடைய மர பிளைவுடுகள் தப்பின. இதுகுறித்து படாளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படிக்கும் 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் உள்பட பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்களின் பாலியல் வன்முறையை மறைக்க முயற்சித்து, குழந்தையின் பெற்றோர்களை மிரட்டிய பள்ளியின் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இன்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மனு வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட ஆறு தொகுதியில் உள்ளடக்கியதாகும்.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றும் விதமாகவும் தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோலப்போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணைய உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
காஞ்சிபுரம் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக செல்வமும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டி.ஆர்.பாலுவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும். ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியின் கீழ் பல்லாவரம், தாம்பரம் சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
மேற்கு தாம்பரம், கன்னடப்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யா. இவரிடம் கடந்த 12ஆம் தேதி செல்போனில் பேசிய மர்ம நபர்கள் பஜாஜ் பைனான்சில் இருந்து பேசுவதாகவும், ரூ. 4 லட்சம் லோன் தருவதாகவும், இதற்காக உரிய ஆவணம் மற்றும் பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய திவ்யா ரூ.85,000 பணம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திவ்யா நேற்று தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம், நகை மற்றும் அடகு வியாபாரம், வணிக வளாகம் உரிமையாளர்கள், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேர்தல் விதிமுறைகளை பற்றி அனைத்து உரிமையாளர்களுக்கும் எடுத்துரைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக பிரமுகர் ஆராமுதன் பிப்.29 அன்று கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் திடீர் திருப்பமாக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி (50) மற்றும் அவரது கார் ஓட்டுனர் துரைராஜ் (37) ஆகியோரை ஓட்டேரி காவல் துறையினர் நேற்று (மார்ச்.18) கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.