Chengalpattu

News March 25, 2024

 மமக ஆலோசனை கூட்டம்

image

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் மாநில துணை பொதுசெயலாளர் யாக்கூப் தலைமையில் 6 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மமக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

செங்கல்பட்டு: சிக்னல் கோளாறு – பொதுமக்கள் அவதி

image

தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில் இன்று (மார்ச்-24) சிக்னல் கோளாறு ஏற்ப்பட்டுள்ளது.
அதன் காரணமாக சிங்கபெருமாள்கோயில் ரயில்வே கேட் லாக் அநாதல் இரயில்வே கேட்டை கடக்கமுடியாமல் இருபுறமும் ஆங்காங்கே வாகனங்கள் தேங்கி நின்று போக்கு
வரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

News March 24, 2024

மாமல்லபுரம்: அலுவலர்களுக்கு பயிற்சி

image

மாமல்லபுரம் அருகே பையனூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இன்று (மார்ச்-24) நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தேர்தல் மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு செய்தனர்.

News March 24, 2024

செங்கல்பட்டு: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன். அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று (1989) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு கட்சி மாறி அதிமுகவில் இணைந்து கட்சியில் அச்சரப்பாக்கம் சட்டமன்ற தனி தொகுதியில் (1991 To 95) சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ராமகிருஷ்ணன் இன்று (மார்ச்-24) காலமானார்.

News March 24, 2024

12 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம்

image

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய அருகே உள்ள சின்ன மேலமையூர் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சின்ன முத்துமாரியம்மன் கோவிலில் இன்று (மார்ச்-24) 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News March 24, 2024

கிளாம்பாக்கம்: பேருந்துகளை சிறைபிடித்த பொதுமக்கள்.

image

வார இறுதி நாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நேற்றிரவு திருவண்ணாமலை செல்வதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். ஆனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இல்லாததால் தென் மாவட்டம் செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 24, 2024

கொசு மருந்து தெளிக்க கோரிக்கை

image

ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பிரியா நகர், அம்பிகா நகர், ராஜிவ் காந்தி நகர், காரணை புதுச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகளில் குப்பைகள் குவிந்தும் , கழிவுநீர் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வெயில் காலத்திலும் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.  ஊராட்சி நிர்வாகம் கழிவுநீரை அகற்றி கொசு மருந்து தெளிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 24, 2024

மது விற்பனை செய்த 14 பேர் கைது

image

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வீடுகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர்கள்,அரசு அனுமதியின்றி பனைமரத்தில் கள் இறக்கி விற்பனை செய்தவர்கள் என 3 பெண்கள் உட்பட 14 பேரை மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 150 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.

News March 24, 2024

கஞ்சா பதுக்கி விற்பனை செய்தவர் கைது.

image

செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அடிவாரம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செங்கல்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் வீட்டில் இருந்து சுமார் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வினோத்தை கைது செய்தனர்

error: Content is protected !!