India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது இந்த தர்ப்பூசணி அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் தர்ப்பூசணி கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக டன் ஒன்று ரூ.12,000 விற்ற தர்ப்பூசணி தற்போது ரூ.15,000 முதல் 17,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அபியுதயா என்பவர் நண்பர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட 4 பேர் அபியுதயாவை தாக்கி 2 லேப்டாப், செல்போன், ரூ.2000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து பயணியரின் கோரிக்கைக்கு ஏற்ப, சாந்திநகரில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு, தமிழக அரசு பஸ் சேவை துவங்கி உள்ளது.பெங்களூரில் இருந்து தினமும் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:00 மணிக்கும், கல்பாக்கத்தில் இருந்து தினமும் இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு பஸ், மறுநாள் காலை 5:30 மணிக்கு, பெங்களூரு வந்தடைகிறது.
தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் சுவர் ஓவியங்கள், சுவரொட்டிகள் அழித்தல், பேனர் அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகராட்சி, 2ஆவது மண்டல அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் நேற்று, ‘சீல்’ வைத்தனர்.
தாம்பரம், மீனாம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(68). இவருக்கு கைப்பேசியில் தொடர்வு கொண்ட மர்மநபர்கள் பிரபல வங்கி அதிகாரிகள் எனக் கூறி, புதிய எ.டி.எம் கார்டு வழங்குவதற்காக ஓ.டி.பி எண் கேட்டுள்ளனர். ஓ.டி.பி-யை சொன்ன அடுத்த நொடியில் வங்கி கணக்கில் இருந்து 3 லட்சம் பணத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து நேற்று மூதாட்டி அளித்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சி, கொளப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று மாலை கொளப்பாக்கத்திலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் “செப்டிக் டேங்க்” சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது விஷவாயு தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கிளம்பாக்கம் போலீசார் தேவராஜின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் 21 பறக்கும் படையினர், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள்,14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் தேர்தல் குறித்த புகார்களை தொலைபேசி மூலம் தெரிவிக்க 18004257088 ,27427412 &27427414 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் தெற்கு பகுதி நான்காவது மண்டலம் 57 ஆவது வார்டு சிவசக்தி நகர் மற்றும் குறிஞ்சி தெருக்களில் குடிநீர் தொட்டிகளை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் நேற்று(மார்ச்.16) குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு வந்தது. 57 ஆவது வட்ட செயலாளர் ஐசக் முன்னிலையில் மண்டல குழு தலைவர். காமராஜர் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு பல்லாவரம் சுரபி மகாலில் நடைபெற்ற I N D I A கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் தாமோ அன்பரசன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, க.செல்வம் எம்.பி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் இருந்து கூவத்தூர் செல்லும் சாலையில் தட்டம்பட்டு கிராமம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.