Chengalpattu

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

பிரபல ரவுடியின் மனைவி கைது

image

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக் (28). A+ ரவுடிகளின் பட்டியலில் உள்ளார். அவரது மனைவி ஜெசிகா (26) என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் (மார்.29) அதிரடியாக கைது செய்தனர். இவர் அசோக்குடன் இணைந்து கஞ்சா விற்பனை, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. மேலும், ஜெசிகா மீது ஏற்கனவே கொலை மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

News March 30, 2025

ஆசை ஆசையாய் வாங்கிய கார்- தற்கொலையில் முடிந்த சோகம் 

image

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் முருங்கை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்ற இளைஞர் கடன் மூலம் கார் வாங்கி ஆசை ஆசையாய் ஓட்டி வந்தார். ஒருகட்டத்தில் தவனை தொகையை செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 27ம் தேதி தற்கொலை முயற்சி செய்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

News March 30, 2025

டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News March 30, 2025

இளைஞர் அடித்து கொலை: 5 பேர் கைது

image

செங்கல்பட்டு துரைப்பாக்கத்தில், பெண் விவகாரத்தில் தாக்கப்பட்ட இளைஞர் இன்று (மார்.30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீவரத்தினம் என்ற இளைஞரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். CSK அணியை கிண்டல் செய்ததற்காக முதலில் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பெண் விவகாரம் என பின்னர் தெரியவந்துள்ளது.

News March 30, 2025

பிரபல் ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸ்

image

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த பிரபல ரவுடி அசோக் (28) மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகளவில் கஞ்சா விற்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ஆப்பூா் வனப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று (மார்.29) கைது செய்யச் சென்றனா். அப்போது அவர் அங்கிருந்த காவலா்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தபோது. போலீசார் அவரை காலில் சுட்டுக் பிடித்தனர்.

News March 30, 2025

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை

image

குமரியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர், கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு பயணம் செய்தார். நேற்று (மார்.29) அதிகாலையில் அந்த ரயில், உளுந்தூர்பேட்டையை கடந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது கண்ணன் (33) என்பவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 29, 2025

செங்கல்பட்டில் சனி தோஷம் நீக்கும் வட திருநள்ளாறு

image

சென்னை பொழிச்சலூரில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வட திருநள்ளாறு என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரர் பாவ விமோஷனம் பெற்ற தலங்களில் ஒன்றாக இக்கோயில் இருப்பதால் சனி பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால் இங்கு சென்று வழிபடலாம். ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

image

கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி(21). இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வருகிற மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்து அண்ணா நகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனிடையே தேர்வு அச்சம் காரணமாக தர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. 

error: Content is protected !!