India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். செங்கல்பட்டில் மே.10 இல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உயர் அதிகார குழு ஒப்புதல் HIGH POWER COMMITTEE வழங்கி 17மாதங்களாக COMEPETANT AUTHORITY பல்வேறு துறைகளின் ஒப்புதல் வழங்காமல் முடங்கியிருந்த சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ இரயில் திட்டத்திற்கு தமிழக அரசின் COMEPETANT AUTHORITY ஒப்புதல் வழங்கி கோப்புகள் தமிழக அரசின் நிதிதுறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக RTI மனுக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெயிண்டர் செல்வகணபதி (36), இவர் நண்பர்கள் 4 பேருடன் நேற்று பல்லாவரம் அடுத்த பொழிச்சலூருக்கு வந்துள்ளார். அப்போது அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின் அங்குள்ள கல்குட்டையில் குளித்தபோது செல்வகணபதி ஆழமான பகுதிக்கு சென்று மாயமானார். தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவும் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இன்றும் தேடி வருகின்றனர்.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
3.2 ஹெக்டர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ள செங்கல்பட்டில் அமைந்துள்ள முதலைகள் வங்கி 1976 ஆம் ஆண்டில் ஜெர்மன் உயிரியலாளரான ரோமுல்ஸ் வைட்டகரால் நிறுவப்பட்டது. இதில், பரவலான இந்திய மற்றும் ஆப்ரிக்க முதலைகள், கடற்பாசிகள், ஆமைகள் மற்றும் பாம்புகள் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது. இங்குள்ள முதலைகளுக்கு அதற்கேற்ற வாழ்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 2400 ஊர்வனங்கள் இந்த வங்கிகள் உள்ளன.
கிழக்குத் தாம்பரம் M.E.S சாலை, சர்மா தெரு அருகில் சாய் பாபா கோவில் எதிரில் பாலாறு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் திறக்கப்படும்போது அது கசிந்து வீணாக சாலையில் செல்கின்றது. மாநகராட்சி ஊழியர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து நீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.06) வெளியாகியுள்ளது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.71 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். செங்கல்பட்டில் மொத்தம் 25,742 பேர் தேர்வெழுதிய நிலையில், 23,907 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.29 சதவீதமும், மாணவர்கள் 92.82 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 2.19% அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் “1 கிராமம் 1 பயிர்” என்ற புதிய திட்டம் 636 வருவாய் கிராமங்களில் செயல்படுத்த உள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகள் நன்மைக்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் 2 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1 ஏக்கரில் நிரந்தர வயல் அமைத்து அதில் 1 பயிர் பயிரிடப்பட்டு பூச்சிகள் மற்றும் நோய்களை கண்காணித்து விவசாயம் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ச்சி 94.71% பதிவாகியுள்ளது. மாணவர்கள் 92.82% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.29% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
குரோம்பேட்டை சத்தியவாணிமுத்து நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகநாதன் (38). இவர் நேற்று முன்தினம் எம்ஐடி மேம்பாலத்தின் கீழ் செல்லும் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தார். குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தின் கீழ், தண்டவாள சுற்றுச்சுவரை ஒட்டி டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருவதால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.