India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 79.2% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 72.74 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.44 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 87.38% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 83.40 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.37 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெயிலால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இன்று மாவட்டத்தில் அதிகாலை முதல் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழையால் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். கிளாம்பாக்கம் பேருந்து முனைய நிர்வாக இயக்குனர் பார்த்திபன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சிராஜ் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட 5 மண்டலத்திலும் புதிதாக தெரு பெயர் பலகைகள் அமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இப்பணியானது மே மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள தேசிய கிராம சுகாதார திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தை நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் அடுத்த இள்ளலூர் ஊராட்சியை சேர்ந்தவர் துளசி (50). இவரது பசு மாட்டை கடந்த 5 ஆம் தேதி முதல் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாட்டின் தலை, குடல் மற்றும் தோல் ஆகியவை கிடந்துள்ளது. திருப்போரூர் போலீசார் விசாரணை செய்ததில் அதே பகுதியை குகநாதன்(38), தயா(20), தட்சிணாமூர்த்தி(43) ஆகியோர் இறைச்சிக்காக மாட்டை திருடி தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.