Chengalpattu

News May 19, 2024

செங்கல்பட்டு: இளம்பெண் மாயம்

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட நெல்வாய் கருக்கிலி , சித்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (20) இவர் கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பெற்றோர் தரப்பில் மதுராந்தகம் காவல் நிலையத்தில் 18ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன காமாட்சி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 18, 2024

மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி 

image

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் மொழி (28). வேங்கைவாசல் பாரதி நகரில் உள்ள  இஞ்சினியரிங் நிறுவனத்தில் தங்கி குபேரன் என்பவருக்கு ஹெல்பராக வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று வெல்டிங் பணியில் இருந்த போது திடிரென இரும்பு பெட்டியில் இருந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 18, 2024

தாம்பரம்: புதிய செயலி அறிமுகம்

image

தாம்பரம் மாநகராட்சியில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற புதிய செயலி அறிமுகப்படுத்த உள்ளதாக நகர்நல அலுவலர் அருளானந்தம் தெரிவித்தார். இதில் வளர்ப்பு பிராணிகளின் உரிமையாளர்கள், முகவரி சான்றிதழ் பிராணிகளின் இனம், வயது, பாலினம், தடுப்பூசி போடப்பட்ட விபரம் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் நிர்ணயிக்கும் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

News May 18, 2024

காதலுடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா

image

கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் நேற்று இரவு 7 மணிக்கு புகார் கொடுத்தார். அதில் தனது காதலன் ஐந்து வருட காலம் தன்னை காதலித்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும், காதலனின் பெற்றோர் தன்னை மருமகள் என்று கூறி ஏமாற்றியதாகவும் சொல்லி நள்ளிரவு வரை காவல் நிலையத்திலேயே இருந்தார். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

News May 17, 2024

10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ஊக்கத்தொகை

image

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி படித்து 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், ஆட்சியர் நிதியில் இருந்து தலா ரூ.50,000 என மூன்று பேருக்கும் ரூ.1,50,000 நேற்று வழங்கினார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாப்பு இல்ல ஊழியர்கள் பங்கேற்றனர்.

News May 17, 2024

செங்கல்பட்டு: மழைக்கு வாய்ப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் செங்கல்பட்டில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

வேடந்தாங்கல்: தாயகம் திரும்பும் வலசை பறவைகள்

image

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஏரி, 36 ஏக்கர் பரப்பளவு உடையது. நீர்மட்டம் 16 அடி உயரம். தற்போது, 4 அடிக்கு தான் தண்ணீர் உள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து, தங்கள் தாய் நாட்டிற்கு பறவைகள் சென்ற வண்ணம் உள்ளன. தற்போது, 13,000த்துக்கும் குறைவான பறவைகளே உள்ளன.

News May 17, 2024

செங்கல்பட்டு: 3 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்

image

தாம்பரம் மாநகராட்சியில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற 3 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் உணவுக் கழிவுகளை எடுத்து காஸ் தயாரிக்கும். கிரீன் விங்க் நிறுவனம் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும். கிரீன் அண்ட் கிளீன் நிறுவனம் குப்பை மற்றும் பிளாஸ்டிக்கை பிரித்தெடுக்கும்.

News May 17, 2024

செங்கல்பட்டு: கொத்தனார் பலியான சோகம்

image

படப்பை ஒரத்தூர் பகுதியை சேர்ந்த ஜோதி (49). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் அதே பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான வீடு கட்டுமான பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது, பலகையில் கட்டியிருந்த மின் விளக்கு தவறி கீழே விழுந்தது. அதை எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைபற்றிய மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 17, 2024

செங்கல்பட்டு: நள்ளிரவில் திருட்டு

image

கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சந்தேகப்படும்படி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தை சாலையில் தள்ளி கொண்டு சென்ற  கண்ட ரோந்து பணியில் இருந்த சேலையூர் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது செம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (27) மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த கணேஷ் (24) என்பதும் ரயில் நிலையம் வெளியே நிறுத்தி வைக்கபட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!