Chengalpattu

News October 25, 2024

2ஆம் இடம்: முதல்வரிடம் கோப்பை பெற்ற கலெக்டர்

image

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், செங்கல்பட்டு மாவட்டம் 2ஆம் இடத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடமிருந்து மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் (வெற்றி கோப்பையை) முதலமைச்சர் கோப்பையை விளையாட்டு வீரர்களுடன் பெற்றுக் கொண்டார். விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். ஷேர் பண்ணுங்க

News October 25, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் இடமாற்றம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 துணை தாசில்தார்கள், அண்மையில் காவல்துறை பயிற்சிக்கு சென்றனர். இந்நிலையில், அவர்கள் பயிற்சி முடித்து பணிக்கு திரும்பினர். அதன்பின், காவல்துறை பயிற்சி முடித்த 13 துணை தாசில்தார்கள் உட்பட 26 துணை தாசில்தார்களுக்கு, தாலுகா அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

News October 25, 2024

இலவசமாக களிமண், வண்டல் மண் எடுக்க அனுமதி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயம், மண்பாண்ட தொழில் பயன்பாட்டுக்காக 641 நீர்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது. தேவைப்படுவோர் tnesevai.tn.gov.in (இணையதள முகவரி) வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

அக்.27 ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகள் இயங்கும்

image

தீபாவளியை முன்னிட்டு, வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும், பகுதிநேர ரேஷன் கடைகளும், அன்றைய தினம் முழுவதுமாக செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் நியாய விலைக் கடையில் தேவையான பொருட்களை தவறாமல் வாங்கி கொண்டு தீபாவளியை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்!

News October 25, 2024

செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியர் ச.அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.

News October 24, 2024

தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி

image

செங்கல்பட்டில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் 62 மாணவ, மாணவிகள் “சிறகை விரிக்கலாம் வாருங்கள்–100” என்ற நிகழ்ச்சியில், தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழ்களையும், சார் ஆட்சியர் வெ.நாராயண சர்மா இன்று (24.10.2024) வழங்கி பாராட்டினார்.

News October 24, 2024

தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் நவ.30 வரை நீட்டிப்பு

image

தாம்பரம்-ராமநாதபுரம் இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம்- ராமநாதபுரம்-தாம்பரம் இடையே வாரம் மூன்று முறை சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் சேவை வருகிற 31ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 24, 2024

பண விதைகள் நடும் பணி: செங்கல்பட்டு 3ஆம் இடம்

image

தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பனை விதை நடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அறிக்கைப்படி, 1,068 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 4,08,636 பனை விதைகள் நட்டு விழுப்புரம் முதல் இடத்தையும், 3,094 தன்னார்வலர்களுடன் 3,77,581 பனை விதைகள் நட்டு நாமக்கல் 2ஆம் இடமும், 828 தன்னார்வலர்களுடன் 32,713 பனை விதைகள் நட்டு செங்கல்பட்டு 3ஆம் இடமும் பிடித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

செங்கல்பட்டில் வரும் 26ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், செங்கல்பட்டு பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் உள்ள லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

விவசாயிகள் குறைதீர் முகாம்: தவறாமல் கலந்து கொள்ளுங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில், நாளை காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சார்ந்த தங்கள் பிரச்னைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க