Chengalpattu

News May 21, 2024

செங்கல்பட்டு: 5 மாதத்தில் 154 பேர் பலி

image

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனுார் சுங்கச்சாவடி முதல் மாவட்ட எல்லையான ஆத்துார் சுங்கச்சாவடி வரை, 50 கி.மீ., தொலைவிற்குள், கனரக வாகனங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு, கொத்துக்கொத்தாக உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், 500க்கும் மேற்பட்ட விபத்துகளில், 154 பேர் பலியாகியுள்ளனர்.

News May 21, 2024

செங்கல்பட்டு: மின்சார ரயில்கள் ரத்து

image

செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோவில் இடையே இன்று காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை கடற்கரையில் இருந்து நண்பகல் 12:40க்கு புறப்படும் மின்சார ரயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

தாம்பரம்: ரூ.44.40 கோடியில் பணிகள் விரைவில்

image

புறநகரில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன் உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகளை உடையது. மாநகராட்சிக்கான கட்டடம் இல்லாததால், தாம்பரம் நகராட்சி செயல்பட்டு வந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பணிகளுக்காக வரும் மக்கள், இயற்கை உபாதைகளை கழிக்கவோ, வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.அந்த இடத்தில் மூன்று மாடி கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

News May 21, 2024

செங்கல்பட்டு மழைக்கு வாய்ப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

செங்கல்பட்டு: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று(மே 21) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வெப்பம் தணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

ஆம்னி பேருந்து மோதி அடுத்தடுத்து விபத்து

image

செங்கல்பட்டு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மஹிந்திரா சிட்டி சிக்னல் அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது திருச்செங்கோட்டில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து மோதியதில் அடுத்தடுத்து 2 கார்கள், 2 வேன்கள் சேதமடைந்தது. இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News May 20, 2024

செங்கல்பட்டு: பைக் ரேஸ் – இளைஞர்களுக்கு எச்சரிக்கை

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் வார இறுதி நாட்களில் விலையுயர்ந்த பைக்குகளில் வரும் சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கரணை உதவி ஆணையர் ஸ்ரீதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் கோவளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு, பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை எச்சரித்து அறிவுரை கூறினார். சில வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News May 20, 2024

செங்கல்பட்டு: தாழ்வாக செல்லும் மின் கம்பியால் ஆபத்து

image

கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூரில் வயல்களுக்கு செல்லும் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள் தரைமட்டத்திலிருந்து 7அடிக்கு தாழ்வாக செல்கிறது. இதனால் அவ்வழியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். இதுகுறித்து நெரும்பூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News May 20, 2024

செங்கல்பட்டு: தீடீரென பாய்ந்த குண்டு: பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம், பாதுகாப்பு பகுதி என்பதால் 24 மணிநேரமும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் இருந்த ரவி கிரண் என்பவர் அதிகாலை பணி முடிந்து ஒப்பந்த பேருந்தில் புறப்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்து பலியானார்.

News May 20, 2024

செங்கல்பட்டு: அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்று (20.5.24) அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!