Chengalpattu

News May 29, 2024

செங்கல்பட்டு: பாெதுமக்கள் புகார்

image

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் கடந்த சில தினங்களாக முறையாக செயல்படவில்லை. செங்கல்பட்டை சுற்றியுள்ள மக்கள் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் -ல் பணம் செலுத்த முடியாமலும், பணம் எடுக்க முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 29, 2024

செங்கல்பட்டு: முதல்வரை சந்தித்து ஆசிபெற்ற அதிகாரி

image

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைவர் தியாகராஜன் குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று (மே-28) சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தியாகராஜன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் அவரது குடும்பத்தினர் ஆசி பெற்றனர்.

News May 28, 2024

தவெக சார்பில் சமபந்தி விருந்து.

image

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்  அறிவிப்பின் பேரில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரிசூலம் தனியார் திருமண மண்டபத்தில் சுமார் 500 நபர்களுக்கு சம்பந்தி விருந்து  நிகழ்ச்சி் நடைபெற்றது. இதில் இதில்  ஏராளமான பொது மக்கள் அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ச்சி உடன் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்

News May 28, 2024

செங்கல்பட்டு: ஒரே இரவில் 3 பேர் வெட்டி கொலை

image

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைப்பகுதியில் நேற்று இரவு வெவ்வேறு இடங்களில் 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக், மலையம்பாக்கத்தில் சூளை தொழிலாளி ராஜேஷ், குரோம்பேட்டையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் தாமஸ் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கொலை குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News May 27, 2024

செய்யூர் அருகே தீப்பற்றி எரிந்த கூரை வீடு

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பாலையார் மடம் பகுதியில் தூய்மை பணியாளர் ராணி என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அவரது வீட்டில் திடிரென தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த பீரோ, சிலிண்டர், கட்டில் போன்ற பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 27, 2024

அலுவலர்களுக்கு வாக்கு என்னும் பயிற்சி

image

தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு என்னும் பயிற்சி இன்று (மே.27) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அருண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News May 27, 2024

செங்கல்பட்டு மகாபலிபுரம் கோயில் குறிப்பு!

image

செங்கல்பட்டிலுள்ள மகாபலிபுரம் இருக்கும் இடம், பல்லவர் காலத்தில் முக்கிய துறைமுகமாக செயல்பட்டு வந்த நகரமாகும். இங்குள்ள நினைவுச் சின்னங்கள், திராவிட மற்றும் பல்லவர் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இங்கு செதுக்கப்பட்ட குகைகள், ஒற்றைக்கல் ரதங்கள், கோயில்கள் சிற்பங்கள் கலைநயத்துடன் அமைந்துள்ளது. இதில் புராண அத்தியாயங்கள் இதிகாசங்களைத் தழுவி சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.

News May 27, 2024

செங்கல்பட்டு: பெண்ணிடம் 5 சவரன் வழிப்பறி

image

கிழக்கு தாம்பரம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் நித்யசுபா (49). தனது மகள் படிக்கும், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று கட்டணம் செலுத்தி, வீட்டிற்கு திரும்பினார்.
ஆஞ்சநேயர் கோயில் தெருவில் நடந்து சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், நித்யசுபா அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 26, 2024

சிறுமியிடம் அத்துமீறிய தாய் 

image

மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மனைவி பிரிந்து சென்றதால் மகேஸ்வரி என்பவரை திருமனம் செய்தார். மகேஸ்வரிக்கு ஏற்கனவே 12 வயதில் மகள் உள்ளார். மகேஸ்வரி சிவக்குமாரை பிரிந்து செந்தில்குமார் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து மகேஸ்வரியின் 12 வயது சிறுமிக்கு ஆபாச படங்களை அனுப்பி தவறாக வழிநடத்துவதாக கூறி சிவசங்கர் அளித்த புகாரில் செந்தில்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News May 26, 2024

செங்கல்பட்டு: 36 கிலோ குட்கா பறிமுதல்

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சன்னதி தெரு பகுதி செல்வராஜ் என்பவரின் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று சோதனை செய்ததில் 16 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் குடியானவர் தெருவில் மாரியப்பன் என்பவரது வீட்டில் இருந்த 36 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!