Chengalpattu

News June 3, 2024

தாம்பரம்: 1000 பேருக்கு அன்னதானம்

image

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101 – வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் ஏற்பாட்டில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார். இதில் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

செங்கல்பட்டு: திடீர் தீ விபத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த, கிழக்கு கடற்கரை சாலை சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று திடீரென தீ பற்றியது. இதனால் புதரில் வெயிலில் காய்ந்திருந்த செடிகள் மீது தீப்பிடித்து அருகில் உள்ள பனை மரங்கள் மீது தீ பரவியது. இதில் 150 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் கருகின. கல்பாக்கம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

News June 3, 2024

செங்கல்பட்டு: மிதமான மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள நகர பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இடி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

News June 2, 2024

அரளி விதை சாப்பிட்டு தற்கொலை

image

செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இருளாண்டி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இவர் அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் நேற்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 2, 2024

ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் இளைஞர் பலி

image

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில், நேற்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில இளைஞர் ரயில் மோதி இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாம்பரம் ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபுராம் (25) என்பது தெரிந்தது.

News June 1, 2024

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை MIT கல்லூரியில் செயல்படும் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி ஆகியோர் உடன் இருந்தனர்.

News June 1, 2024

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் புது இயக்குநர்

image

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் புதிய இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர் நேற்று(மே 31) பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த இயக்குநர் வெங்கட்ராமன் ஓய்வு பெற்றதையடுத்து இவர் பதவி ஏற்றுக் கொண்டார். இவர் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 36 ஆண்டுகள் பணியாற்றி டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார்.

News June 1, 2024

செங்கல்பட்டு: சூட்டிங் ஸ்பாட்டான பாலாறு!

image

செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூர் பாலாற்று பகுதியில் ‘தக்லைஃப் ‘ திரைப்படத்திற்கான சூட்டிங் நடைபெற இருக்கிறது. நாயகன் படத்திற்கு பிறகு 36 வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்திற்காக பாலாறு பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 31, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து: இருவர் பலி 

image

செங்கல்பட்டு அடுத்த பாலூரைச் சேர்ந்தவர்கள் கங்காதரன் (52), அமுலு (46) தம்பதியினர். இவர்கள் இருவரும் நேற்று டூவீலரில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். திம்மாவரம் பகுதியில் சென்ற போது இவர்கள் டூவீலர் மீது  பின்னால் வந்த லாரி மோதி கங்காதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமுலுவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்  அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  

error: Content is protected !!