Chengalpattu

News June 6, 2024

செங்கல்பட்டு: திமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம்

image

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. வரும் 13ம் தேதி செங்கல்பட்டில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், 18ம் தேதி தாம்பரத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில், 19ம் தேதி திருப்போரூரில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், 20ம் தேதி பல்லாவரத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெறும்.

News June 6, 2024

செங்கல்பட்டு: திடீர் மழையால் அவதி

image

செங்கல்பட்டு மாவட்டம் பவூஞ்சூர் வார சந்தை வாரந்தோறும் புதன் கிழமை செயல்படும். நேற்று மாலை திடீரென சூரை காற்றுடன் அதிக அளவு மழை பெய்ததால் வார சந்தை கடுமையான பாதிப்பு அடைந்தது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே காய்கறிகளை வாங்கி சென்றனர் . திடீர் மழையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

News June 6, 2024

விழிப்புணர்வு ஏற்படுத்திய 9 வயது சிறுமி

image

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மறைமலைநகர் அருகே திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகள் சாமினி என்ற 9 வயது குழந்தை விழிப்புணர்வு பதாகைகளுடன் சாலையில் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் 9 வயது குழந்தையின் செயலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

News June 5, 2024

அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

News June 5, 2024

செங்கல்பட்டில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:

*திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு- 7,58,611 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் பிரேம் குமார்- 2,71,582 வாக்குகள்
*தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால்- 2,10,222 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ரவிச்சந்திரன்- 1,40,201 வாக்குகள்

News June 5, 2024

செங்கல்பட்டு: ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் இளைஞர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகே நேற்று(ஜூன் 4) காலை, தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்த பாபு ராம்(25) என்பதும், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.

News June 5, 2024

மாமல்லபுரத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

image

18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று(ஜூன் 4) எண்ணப்பட்ட அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் திமுக தலைமையில் போட்டியிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சி 40/40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து திருப்போரூர் ஒன்றியம், மாமல்லபுரம் பேரூராட்சியில் திமுக நகர செயலாளர் விஸ்வநாதன், கவுன்சிலர் மோகன்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

News June 4, 2024

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தபால் ஓட்டு மற்றும் 32வது சுற்று இறுதி நிலவரம்
டி.ஆர்.பாலு (திமுக) – 755671 + 2940 = 758611
பிரேம் குமார் (அதிமுக) – 270549 + 1033 = 271582
வேணுகோபால் (பாஜக – தமாகா) – 209295 + 927 = 210222
ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) – 139899 + 302 = 140201 அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 487029 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

error: Content is protected !!