India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு அடுத்த நென்மேலி பகுதியில் கடந்த 7ம் தேதி யுவராஜ் (41) என்பவரை மர்ம நபர்கள் தலை மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் வெட்டி கொலை செய்தனர். வழக்கில் இரண்டு பேரை கைது செய்தனர். சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இருவரை இன்று ஜூன் 11ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் முருகன் (40), இவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை பணிக்கு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வண்டலூர் – மீஞ்சூர் சாலையில் சென்றார். அப்போது சாலை தடுப்பில் பேருந்து மோதி டிரைவர் முருகன் கீழே விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
உத்தண்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் (37). இவரது மனைவி விமலா, நேற்று முன்தினம் திருப்போரூர் கோவிலில் இவர்களது மகள்களுக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உறவினர்கள் அளித்த 1 கிராம் தங்க மோதிரத்தை விமலா தொலைத்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் வீட்டுக்கு வந்த சக்திவேல் விமலாவுடன் சண்டையிட்டு மாமனார் சரவணன், மாமியார் கீதாவை இரும்பு ராடால் தாக்கியுள்ளார்.
வண்டலூர் – பெருங்களத்தூர் பகுதியில், தனியார் மருத்துவ சொஸைட்டிக்கு மருத்துவமனை கட்டிக்கொள்ள தமிழக அரசு 1975ம் ஆண்டு 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. ஆனால் மருத்துவமனை கட்டாமல் இருந்ததால் 2009ம் ஆண்டு அரசு அந்த நிலத்தை திரும்ப பெற்றது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று சென்னை ஐகோர்ட் நில ஒதுக்கீட்டை திரும்ப பெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தது.
நாடாளுமன்ற தேர்தல் முடிகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம் சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
கேளம்பாக்கம் ஊராட்சி பள்ளியில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திருப்போரூர் முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன் பங்கேற்று மாணவர்களுக்கு பூங்கொத்து, சாக்லேட் கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் சாய் மதுபாலன். கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் காரணை புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு நேற்று பெற்றோருடன் சென்ற சாய் மதுபாலன், வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிய போது கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமீன் பல்லாவரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள துவக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவியருக்கு மண்டல தலைவர் இ. ஜோசப் அண்ணாதுரை மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி மேளதாளங்களுடன் வரவேற்றார். அதனை தொடர்ந்து மாணவ மாணவியருக்கு சீருடை புத்தகங்கள் வழங்கினார்.
திருப்போரூர் – தாம்பரம், கொளத்துார்- மேடவாக்கம், புங்கேரி – தாம்பரம், கோவளம் – தாம்பரம், மாமல்லபுரம்- தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.
பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் வடிகால்வாய் வசதி இல்லாததால் மழை நேரத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலையில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி நேற்று இரவு பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து 71 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்நிலையில் மோடி பதவியேற்பு விழாவை கொண்டாடும் வகையில் நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் பாஜக நகர தலைவர் முரளிதரன் மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் கலாராணி தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Sorry, no posts matched your criteria.