India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரோட்டா சாப்பிட்ட இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே நேற்று சுப நிகழ்ச்சியில் பரோட்டா சாப்பிட்ட மோகனசுந்தரம் (28) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உறவினர்கள் தனியார் மருத்துவமனை
கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இவர் ஏற்கனவே இருந்துவிட்டார் என தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம், வரும் 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்காக, அனைத்து துறை அலுவலர்கள், அரசு அலுவலகங்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர், பாலுார், காட்டாங்கொளத்துார் பகுதி மக்கள், அனைத்து துறை சார்ந்த மனுக்களையும் இன்று முதல் வழங்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்தவர் பாபு (55). இவர், இதே பகுதியில் சோடா கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் திடீரென நேற்று பாம்பு புகுந்ததால், பாபு அலறியடித்துக் கொண்டு வெளியேறினார். இந்நிலையில், பாம்பு பிடிக்கும் ராமு (75) என்பவருக்கு, தகவல் தெரிவித்ததையடுத்து, சோடா கடையில் புகுந்த 7 அடி நிலமுள்ள சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். வழக்கமான தாசில்தார்கள் திருப்போரூர் பூங்கொடி, வண்டலூர் ராஜேந்திரன், மதுராந்தகம் ராஜேஷ், தாம்பரம் நடராஜன், செய்யூர் ராதா, நில எடுப்பு தனி தாசில்தார்கள் துரைராஜன், செங்கல்பட்டு சரவணன், வாசுதேவன், செங்கல்பட்டு சப்-கலெக்டர் பி.ஏ.ராஜன் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டிற்கான ஜமபந்தி இன்று ஜூன் 12 செங்கல்பட்டு வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். வழக்கமான தாசில்தார்கள் திருப்போரூர் பூங்கொடி, வண்டலூர் ராஜேந்திரன், மதுராந்தகம் ராஜேஷ், தாம்பரம் நடராஜன், செய்யூர் ராதா, நில எடுப்பு தனி தாசில்தார்கள் துரைராஜன், செங்கல்பட்டு சரவணன், வாசுதேவன், செங்கல்பட்டு சப்-கலெக்டர் பி.ஏ.ராஜன் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை, கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செம்பாக்கம் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த மைலீஸ்வரன் என்ற 8 வயது சிறுவன் தெருவில் நடந்து சென்ற போது, தெருவில் சுற்றித்திரிந்த நாய்கள் சிறுவனை சூழ்ந்து கடித்து குதறின. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டி சிறுவனை குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் செங்கல்பட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் சற்று நிமமமதி பெருமூச்சு விட்டனர்.
ECR பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை-மாமல்லபுரம் சுங்கச்சாவடியில் கார் ஜீப், 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.1 முதல் 68 வரையும், இலகு ரக வணிக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.1 முதல் 110 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வருத்தத்தில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜூன் 12) முதல் ஜமாபந்தி தொடங்கப்படுவதாக ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். வருவாய் தீா்வாயத்துக்கு முன்னா் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக முன்கூட்டியே களஆய்வு மேற்கொண்டு வருவாய் தீா்வாயஅலுவலருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். ஈதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென எனத் தெரிவித்துள்ளாா்.
Sorry, no posts matched your criteria.