India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் இன்று(ஜூன் 19) சாகர் கவாச் ஒத்திகை இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களில் நடைபெறுகின்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட கடலோர கிராமப் பகுதிகளில், இரண்டு நாட்களாக நடைபெற உள்ள சாகர் கவாச் ஒத்திகை இன்று(ஜூன் 19) தொடங்கியது. எனவே சந்தேகத்திற்கு இடமான நபர் கடல் வழியாக வந்தால் காவல் துறைக்கு தகவல் தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், தாழ்வான பகுதிகள், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் பகுதியில் அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெண் காவலர்கள் பங்கேற்றனர். இதையடுத்து இறுதி நாளான நேற்று வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் சுற்றியுள்ள அதிமுக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்போரூர் ஒன்றிய சேர்மனும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும் இவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இதில் திமுக பொறுப்பாளர்கள் ரமேஷ், அன்பு, சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறின்றி சாலையோரம் வியாபாரம் குறித்து கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகர் சங்க நிர்வாகிகள், குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் பகுதியில் அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெண் காவலர்கள் பங்கேற்றனர். இதையடுத்து இறுதி நாளான இன்று வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
காட்டாங்கொளத்தூரில் நாளை மறுநாள் (ஜீன்.19) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெறுகிறது. இதில் ஆட்சியர், அனைத்து துறை அலுவலர்களால், அரசு அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடை, பள்ளிகள்,பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்படும். அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை காட்டாங்கொளத்தூர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது மனுக்களை அளிக்கலாம்.
கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு
கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் மகளிர் காவலருக்கான சிறப்பு அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பல்வேறு மாநிலத்தில் இருந்து பெண் காவலர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் மரகன்றுகளை நட்டு வைத்தார்.
மதுராந்தகம் சின்ன காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, கடந்த ஆறு மாதமாக, கூடுவாஞ்சேரி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 12-ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் புகார் அளித்தனர். அதேபோன்று மேலும் இரண்டு இளம் பெண்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு, அதன் உரிமையாளர்கள், அவசியம் உரிமம் பெற வேண்டும் என, தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தியது.
நாய் மற்றும் பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, https://tcmcpublichealth.in என்ற புதிய இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், புதிய இணையதளம் வாயிலாக,317 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.