Chengalpattu

News June 21, 2024

திருவண்ணாமலை செல்ல சிறப்பு பேருந்துகள்

image

பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவண்ணாமலை மற்றும் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று (வெள்ளி) 600 பேருந்துகள், நாளை (ஜூன் 22) 410 பேருந்துகள், ஜூன் 23ஆம் தேதி (ஞாயிறு) கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எஸ்.இ.டி.சி சார்பில் 30 ஏசி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

News June 21, 2024

பரனூர் சுங்க சாவடியில் அதிரடி ஆய்வு

image

செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் வெளிமாநில பதிவெண் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் நடத்திய இந்த சோதனையில் சென்னை – தேனி நோக்கி சென்ற நாகலாந்து மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

News June 21, 2024

செங்கல்பட்டு: விவசாயிகள் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்,  ஆட்சியர் அருண்ராஜ்,  மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

News June 21, 2024

கொண்டமங்கலத்தில்  ஆட்சியர் ஆய்வு

image

காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டமங்கலத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பராமரிக்கப்படுகிறது . தாம்பரம், மாமல்லபுரம், சேலையூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த 72 மாடுகளில் 56 மாடுகள் தலா ரூ.2,000 அபராதம் விதித்து உரிமையாளர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 16 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோசலையை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்

News June 20, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

பௌர்ணமி கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை யாத்ரீகர்களின் வசதிக்காக தாம்பரம் -திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை (ஜூன்.21) மதியம் 12.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு தி.மலை சென்றடையும். மறுமார்க்கமாக தி.மலையில் இருந்து ஜூன்.22 அன்று காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 20, 2024

செங்கல்பட்டில் தனியார் உணவகத்திற்கு அபராதம் விதிப்பு

image

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் உணவகத்தில் நேற்று (ஜூன்.19) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவகம் தூய்மையாக வைத்திருக்காத காரணத்தினால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உணவகத்திற்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

News June 20, 2024

செங்கல்பட்டு: வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

image

மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் என மூன்று சட்டங்களின் பெயரை மாற்றி ஜூலை 1 முதல் முதல் இந்தி கலந்த சமஸ்கிரத மொழியில் மாற்றம் செய்கிறது. இதனால், வழக்கறிஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவே இந்த மூன்று சட்டங்களை திருத்தம் செய்யும் மத்திய அரசை கண்டித்து செங்கல்பட்டில் இன்று வழக்கறிஞர்கள்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News June 20, 2024

தம்பி பிரியாணி சாப்பிட்டதால் அண்ணன் தற்கொலை

image

தாம்பரம், ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது 2வது மகன் தாரிஸ். சைவ பிரியரான இவர், அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், அவரது சகோதரர் ராகுல், நேற்று அவரது நண்பர் கொடுத்த  சிக்கன் பிரியாணியை நேற்று வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். தாரிஸ் இதை கண்டித்ததால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், தாரிஸ் தற்கொலை செய்துகொண்டார். 

News June 20, 2024

செங்கல்பட்டு அரசு மறு வாழ்வு இல்லத்தில் ஆய்வு

image

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு அடுத்த பரனூர் அரசு மறு வாழ்வு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று (ஜூன்.19) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு உள்ள முதியோர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வருவாய்துறையினர் உடன் இருந்தனர்.

News June 19, 2024

செங்கல்பட்டு: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு: எரிவாயு நுகர்வோருக்கு உள்ள குறைகளை அறிய குறைதீர்கூட்டம் 21.06-2024ல் நடத்த முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக தேதி மாற்றப்பட்டு (20.06.2024 ) நாளை காலை 11.00 மணிக்கு செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகர்வர்களுடன் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கூட்டத்தில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!