India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அச்சிறுபாக்கம் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் , நடப்பு பருவத்திற்கான நெல் ரகங்களான கோ 51, கோ 54, ஏடிடி37 ஆகிய நெல் ரகங்கள், போதுமான அளவில் இருப்பு உள்ளன. மேலும், ஆடி பட்டத்திற்கு ஏற்ற சான்று பெற்ற உளுந்து, மணிலா, எள் விதைகளும் உள்ளன. அவற்றைப் பெற, அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு, விவசாயிகள் பயன்பெறலாம் என அச்சிறுபாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் ஆடு, கோழி, தேங்காய், உப்பு, மிளகு, தலைமுடி காணிக்கை மற்றும் கடை வாடகை, நெய்தீபம் விற்பனை, வெள்ளி உரு விற்பனை, வாகன நிறுத்த கட்டணம் போன்றவைகளுக்கு உரிம ஏலம் கடந்த வாரம் நடந்தது. இதில் தலைமுடி சேகரித்தல் உரிமம் குறைவாக ஏலம் போனதால் ஒத்திவைக்கப்பட்டது. மறு ஏலம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் ரூ.53.62 லட்சத்திற்கு ஏலம் போனது.
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரயில்களில் பயணிகள் வசதிக்காக ஏசி பெட்டி கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தெற்கு ரயில்வே வாரியம் 12 பெட்டிகள் கொண்ட 2 குளிரூட்டப்பட்ட மின்மோட்டார் பொருத்திய யூனிட்களை ஒதுக்கியுள்ளதாக வீட்டுவசதி துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தாம்பரம் ஆணையரக ஆய்வாளர் நடராஜன், கண்ணகி நகர் ஆய்வாளர் சிவகுமார், கூடுவாஞ்சேரி ரவிக்குமார், பள்ளிக்கரணை அணில் குமார், கேளம்பாக்கம் தீபக் குமார், பள்ளிக்கரணை குற்றப்பிரிவு வெங்கடேசன், ஐ.எஸ் பிரிவு ஆய்வாளர் சதீஷ், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராக்குமதி ஆகியோர் பணியிடமாற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று மாலை தமிழகம் முழுவதும் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் ஆர்பாட்டம் நடத்த மேடை அமைத்திருந்த பா.ஜ.க நிர்வாகிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட வளையாபுத்தூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய் கடந்த வருடம் தொடங்கியது. தனியார் சமூக பொறுப்பு நிதியில் இருந்து நீர் பாதுகாப்பு திட்டத்தில் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் திட்ட செயல்பாடுகள் குறித்த கையேட்டினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டார்.
வார இறுதி நாட்களில் சென்னையில் பணியாற்றும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்குச் செல்லும்போது கடும் கூட்ட நேரில் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு கூடுதலாக சிறப்பு ரயில்களை வார இறுதி நாட்களில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டாங்கொளத்தூர் அருகே ஆத்தூர் ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் புனிதா. இவர் தனது வீட்டு வாசலில் வழக்கம் போல் நேற்று கோலம் போடும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் புனிதாவின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து, புனிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சி படேல் தெருவை சேர்ந்தவர் மாதவன் (23), பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர்கள் கண்டித்ததால் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து கீழே மாதவன் குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தார். தாம்பரம் போலீசார் விசாரணை செய்கின்றனர்.
தாம்பரம் அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹஸ்வந்த் (20) என்ற மாணவர் தனது மேல் படிப்புக்காக மும்பை செல்ல உள்ளார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் அருண்ராஜ் ரூ.35 ஆயிரம் காசோலையை மாணவனிடம் வழங்கினார். காசோலை பெற்றுக்கொண்ட மாணவன் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.