Chengalpattu

News June 25, 2024

இணைய பாதுகாப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்

image

வண்டலூர் அருகே மேலக்கோட்டையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம் மற்றும் தேசிய ஆற்றல் பயிற்சி நிறுவனம் (NPTI) ஆகியவை இணைய பாதுகாப்பு மற்றும் நிலையான, எரிசக்தி தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது

News June 25, 2024

செங்கல்பட்டு: ஐ.டி. ஊழிர் கொலை

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) சென்னை ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தனது நண்பர்களுடன் மது அருந்தும் போது மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவரது நண்பர்கள் விக்னேஷை கத்தியால் தலையில் வெட்டி படுகொலை செய்து பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். இச்சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

News June 24, 2024

செங்கல்பட்டில் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

image

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறை இன்று தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 481 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News June 24, 2024

திருநங்கைகளுக்கு சுய உதவிக் குழு துவக்கம்

image

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு ‘நங்கை’ என்ற சிறப்பு சுய உதவிக் குழு இன்று (ஜூன் 24) துவங்கப்பட்டது. இந்த குழுவிற்கான வங்கி கணக்கு புத்தகத்தினை மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் திருநங்கைகளிடம் வழங்கினார். இதில் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News June 24, 2024

இளைஞர் முகம் சிதைத்து படுகொலை

image

தாம்பரம் அருகே முடிச்சூரில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் மீன்பிடி தொழில் செய்து வந்த விக்னேஷ் என்ற இளைஞர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார். இறந்தவரின் உடலை கைப்பற்றிய பீர்க்கன் காரணை போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜீவ் காந்தி, சூரியகாந்தி உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

News June 23, 2024

சென்னை மாநகராட்சியில் இணைக்க கோரிக்கை

image

புனித தோமையார் மலை ஒன்றியத்தில் மேடவாக்கம், பெரும்பாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வருகிறது. இந்நிலையில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் நேற்று மேற்கண்ட ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியில் இணைக்க கோரிக்கை சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

News June 23, 2024

தூண்டில் வளைவு : சட்டசபையில் அறிவிப்பு வெளியானது

image

திருப்போரூர் ஒன்றியம் கானாத்தூர் ரெட்டி குப்பத்தில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளத்துடன் கூடிய தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று நேற்று சட்ட சபையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துறை ரீதியான மான்ய கோரிக்கை விவாதத்தில் தெரிவித்தார். இதன் மூலம் மீன் இறங்குதளம், தூண்டில் வளைவு, சாலை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 23, 2024

செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

அதிமுக ஆர்ப்பாட்டம்  – போலீஸ் குவிப்பு

image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரிலும் அதிமுக நாளை போராட்டம் நடத்த உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகிக்கும் வகையில் திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

News June 23, 2024

செங்கல்பட்டு: பிரியாணி கடையை தூக்கிய போலீஸ்

image

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில்,  ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டதால் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பிரியாணி கடையின் தள்ளு வண்டியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

error: Content is protected !!