India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலையூர் அருகே கோவிலாச்சேரியை சேர்ந்தவர் சேகர். கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் கிணறு தோண்டும் பணிக்கு சென்று விட்டனர். நேற்று மாலை வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே, சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ரூ. 6 லட்சம் பணம், 4 சவரன் நகை திருடு போனது. இதுதொடர்பாக சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திண்டுக்கல், தேனி, செங்கல்பட்டு, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு வட்டத்திற்குட்பட்ட 11 பேருக்கு உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, வட்டாட்சியர் பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் கண் கண்ணாடி, இலவச பேருந்து அடையாள அட்டை, உள்ளிட்டவை இன்று (ஜூன் 26)வழங்கப்பட்டது. இன்று மனு வழங்கிய மாற்றுத்திறனாளி 50 பேருக்கு உடனடியாக தீர்வு கண்டு ஆட்சியர் அருண்ராஜ் உடனடியாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழகம் இணைந்து, 2024-25ஆம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை வழங்கி வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு ஜூலை .1 ஆம் தேதி முதல் மார்ச்.31 வரை ஒன்பது மாதத்திற்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்கு நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாரியத்தில், பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு, உதவித்தொகை மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்காக 14 விடுதிகள் உள்ளன. இதில்,சேர விரும்பும் பள்ளி மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 16.7.2024 க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்காக 14 விடுதிகள் உள்ளன. இதில்,சேர விரும்பும் பள்ளி மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 16.7.2024 க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பகுதியில் தனியார் ஐடி நிறுவன ஊழியர் விக்னேஷ் கொலை செய்யப்பட்டு கோகுலாபுரம் ஏரியில் உடல் புதைக்கப்பட்டது. இந்நிலையில் வட்டாட்சியர் முன்னிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மேலும், விக்னேஷை கொலை செய்து புதைத்த கொலை குற்றவாளிகள் விசு மற்றும் தில்கோஷ்குமார் காட்டிய இடத்தில் தோண்டும் பணிகள் இன்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக விளங்கிடவும்,
கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க, மாநில கட்டுப்பாட்டு எண் 10581 மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தொலைபேசி எண் 18004257088 அல்லது Whatsapp எண். 9042781756 பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே , மாவட்டத்தில் உள்ள மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.