Chengalpattu

News July 1, 2024

செங்கல்பட்டில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

செங்கல்பட்டு: கிராம சபை கூட்டம் தள்ளிவைப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவித்திருந்தார். இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த கிராம சபை கூட்டத்தை வரும் ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், கிராம சபை கூட்டத்தை வேறுவொரு தேதியில் நடத்தும்படி ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டிருந்தது.

News June 29, 2024

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு அழைப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலருக்கு வரும் ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 29, 2024

ஷேர் மார்க்கெட் டிரேடிங் மோசடி

image

சிபிஐ போல் மோசடி, ஷேர் மார்க்கெட்டிங், பகுதிநேர வேலை, டெலிகிராம் டாஸ்க் ஸ்கேம் தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பர் 1930, www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகலாம் என  தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்

image

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் கேளம்பாக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம், கோவளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகம், கிளாம்பாக்கம் புறநகர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

News June 29, 2024

புகையிலை பொருட்கள் விற்பனை ஆட்சியர் எச்சரிக்கை

image

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டருகே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் உணவு பாதுகாப்பு துறை 94440-42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

செங்கை: 30ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்

image

செங்கல்பட்டில் வரும் 30ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்திடும் பொருட்டு 356 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News June 28, 2024

செங்கல்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.30 லட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசிய அவர், செங்கல்பட்டில் 13,000 டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் ரூ.29 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை.22 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயில் ஜூலை 7, 14, 21 இல் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு ஜூலை 8, 15, 22 இல் இயக்கப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

News June 27, 2024

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் இன்று செங்கல்பட்டில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது திட்டத்தை செயல்படுத்த போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும், போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும், உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!