India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய விமானப்படை அக்னிவீர் வாயு தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ள 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் . செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு செங்கல்பட்டு
மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட முதியோர் நலக் குழு உறுப்பினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது
டாஸ்மாக் மூலம் மது அருந்துபவர்களை ஊக்குவிப்பவர்களுக்கு மத்தியில் நடிகர் விஜய் கல்வியை ஊக்குவித்து வருவதாக செங்கல்பட்டு மாணவி சுபிக்ஷ புகழாரம் சூட்டியுள்ளார். திருவான்மியூரில் நடைபெற்று வரும் த.வெ.க. ஊக்கத்தொகை வழக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், போதை பொருள்கள் இல்லாத சமூகத்தை விஜய் வலியறுத்தி வருவதாகவும், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சில பொய்யான மற்றும் போலியான உதவி எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் செயலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்றும், எனவே பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு 359 ஊராட்சிகளில் 4000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிதியாண்டில், ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என 3 தவணையாக பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் வீடு கட்ட பணி ஆணை வழங்கப்படும் என்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள Group-II/IIA போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 8-ம் தேதி துவங்கப்பட உள்ளது. எனவே, வேலை தேடும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு கலெக்டர் ச.அருண்ராஜ் கேட்டுகொண்டுள்ளார்.
QR code மூலமாக நூதன மோசடி நடப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்பின் தெரியாத நபர் தங்களுக்கு தெரியாமல் பணம் அனுப்பி அதை திருப்பி குறிப்பிட்ட QR code க்கு அனுப்புமாறு கேட்கின்றனர். பணத்தை திருப்பி அனுப்பும் போது தங்களது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணமும் திருடப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண தொகையாக தலா ரூ.1,00,000 க்கான காசோலையினை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று (ஜூலை 1) வழங்கினார். உடன் சார் ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட வழங்கல் அலுவலர் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொறுப்பு) சாகிதா பர்வீன் உடன் இருந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் துவக்கி வைத்தார். இந்த முகாம் இன்று முதல் ஆகஸ்டு 31 வரை நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 2,46,848 குழந்தைகளுக்கு துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்க வைட்டமின் A திரவம் வழங்கப்படும். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராஜேஸ்வரி வேதாச்சலம் கலை அறிவியல் கல்லூரி வரை இன்று (ஜூலை.1) மக்கள் தொடர்பு துறை சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.