India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
செங்கல்பட்டு மாவட்டம் புறநகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் 200க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். விபத்துக்களை தடுக்க போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. வாகன போக்குவரத்துக்கு ஏற்ப இந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”குழந்தை திருமணம் சட்டவிரோதம். பெண்களுக்கு 18க்கும், ஆண்களுக்கு 21க்கும் குறைவான வயதில் திருமணம் செய்தால் 2 ஆண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதை ஊக்குவிப்பவரும் தண்டனைக்கு உட்படுவர். புகாருக்கு 1098, 1091, 181 போன்ற இலவச எண்களில் தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி எண் – 044 – 27427412, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை- 1077, பேரிடர் கால உதவி- 1077 / 044-27427412 /27427414, காவல் கட்டுப்பாட்டு அறை- 100, விபத்து உதவி எண்- 108, தீ தடுப்பு- 101, விபத்து அவசர வாகன உதவி- 102, குழந்தைகள் பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு- 1091, BSNL ஹெல்ப் லைன்- 1500. *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிரவும்
டி.ஜி.பி., ரேங்க் ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர். இவர், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குநராக உள்ளார். இவரது பெயரில் சைபர் குற்றவாளிகள் போலியாக பேஸ்புக் கணக்கு துவங்கி, அவரது நண்பர்கள், உறவினர்களுக்கு நட்பில் இணைய அழைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசில் சந்தீப் ராய் ரத்தோர் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டிவைன் எண்டர்பிரைசஸ் கம்பெனியில் மொபைல் ஆபரேட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 10, 12, ITI, டிப்ளமே படித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதற்கு வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <
தாம்பரம் அடுத்த படப்பையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் இன்று (ஏப்ரல் 5) கைது செய்தனர். கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சதாம் உசேன், பிரவீன் குமார், இம்ரான்கான் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம் என சலுகை முறையில் விற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் பூர்ணிமா என்ற பெண்ணை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக மணிகண்டன் பூர்ணிமாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூர்ணிமா கடந்த 31ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் மணிகண்டனை போலீசார் நேற்று (ஏப்ரல் 4) கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர்கள் அலுவலகத்தில் மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து புகார்களையும் நிவர்த்தி செய்யும் பொருட்டு, 05.04.2025 (நாளை) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செங்கல்பட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். குறிப்பாக பல்நோக்கு பணியாளருக்கு எழுத படிகக் தெரிந்திருந்தால் போதுமானது. சம்பளம் 8,000-35,000 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.