India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 70 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் பொதுப்பணி துறை (ம) ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (ம) வண்டல் மண் ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துச் செல்ல tnsevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள 52 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 10ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு அடுத்த வேதநாராயணபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற தலைப்பில் மாவட்ட அளவில் இன்று பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் சிறப்புரை ஆற்றி துவங்கி வைத்தார். அரசு அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு நெல் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் BPT, CO-55 ADT-57, ADT-54, NLR, பொன்னி (IWP), Co-52, RNR, கோ-51, பாரம்பரிய நெல் விதைகள் – மாப்பிள்ளை சம்பா, சிவன் சம்பா, கருங்குறுவை போன்ற நெல் வகைகள் உள்ளது. எனவே, விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் விதைகள், இடுபொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த வாரம் மாமல்லபுரம் போலீசாரால் கைதுசெய்யப்பட்ட ரவுடி சத்யாவிற்கு துப்பாக்கி வழங்கிய வழக்கில் பல்லாவரம் பாஜக நிர்வாகியும், வழக்கறிஞருமான அலெக்ஸ் சுதாகருக்கு ஜாமீன் வழங்கக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் எஸ்பி சாய் பிரணீத் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய பரிந்துரை செய்ததின்பேரில் கலெக்டர் அருண்ராஜ் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய நேற்று உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. அதன்படி செங்கல்பட்டு, அரசு கலைக் கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வரும் 24, 26ஆம் ஆகிய தேதிகளில் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில், அது வெறும் புரளி என தெரிய வந்தது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் மற்றும் பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு, ஜூலை 31ஆம் தேதிக்குள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவு 9 மணிக்கு தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தமிழகத்தில் ஜூலை 9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்திய விமானப்படை அக்னிவீர் வாயு தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ள 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் . செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு செங்கல்பட்டு
மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.