India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்10.07.2024 ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் 15.07.2024 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 476 மனுக்கள் பெறப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1798 இடைநிலை ஆசிரியர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், இன்று (08.07.2024) செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 100 பேருக்கு டேப்லெட்களை கலெக்டர் ச.அருண்ராஜ் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் மனு பெறும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்துகொண்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த மாற்று திறனாளிகளின் மனுக்களை பெற்றுக்கொண்டனர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் லோட்டஸ் செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான ஒரு நாள் செஸ் போட்டி ஜூலை 14ம் தேதி செங்கல்பட்டில் உள்ள வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நடைபெற உள்ளது. பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில், 16 வயதுக்குட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 80502 85077, 99405 67200 மற்றும் 99400 58265 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தின் கீழ், செங்கல்பட்டைச் சேர்ந்த அருள் என்ற மாற்றுத்திறனாளியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகத் தொடர்புகொண்டு அவரது கருத்துகளை கேட்டறிந்தார்.இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பேட்டரி ஸ்கூட்டர், 1 லட்சம் கடனுதவி மற்றும் ரூ.2000 ஆக மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வரும் ஜூலை 10ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை, உதவித்தொகை உள்ளிட்ட தங்களது தேவைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று தொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், புதிய தொழில் முனைவோர், அண்ணல் அம்பேத்கர் சாம்பியன்ஸ் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தேர்வான 50 பேருக்கு ரூ.206 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில நாள்களாக பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.