Chengalpattu

News July 11, 2024

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் தொடக்கம்

image

தமிழகம் முழுவதும் ஊரகப் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில், இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அந்த வகையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 12 மணி அளவில் சிறு,குறு தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைக்கிறார். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

News July 11, 2024

கடன் பெற ஆட்சியர் அழைப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் கூட்டுறவு வங்கி மூலம் இவ்வாண்டு பயிர்க்கடன் ரூ.140.00 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பராமரிப்புக் கடன் ரூ.20.00 கோடியும், மீன்வள கடனுக்கு ரூ.15.00 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடன் தேவைப்படுவோர் உரிய ஆவணங்களுடன், அருகாமையில் உள்ள கூட்டுறவு வங்கியை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் நேற்று அறிவித்துள்ளார்.

News July 11, 2024

செங்கல்பட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை, மனுதாரர்கள் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் ச.அருண்ராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

செங்கல்பட்டில் கனமழை பெய்து வருகிறது

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாமல்லபுரம், பெருங்குளத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், இரவில் மழை பெய்து குளிச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News July 10, 2024

செங்கல்பட்டு மாவட்ட மாணவி முதலிடம்

image

பொறியியல் படிப்புக்கு நடப்பு கல்வியாண்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை, இன்று காலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகராவ் வெளியிட்டார். இதில் பொதுப் பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி தோஷிதா லட்சுமி 200/200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

News July 10, 2024

தாம்பரம்: புதிய ஆணையர் பொறுப்பேற்பு

image

தாம்பரம் மாநகர காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அபின் தினேஷ் மோதக் புதிய காவல் ஆணையராக நேற்று நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் இன்று பொறுப்பேற்று கொண்டார். 

News July 10, 2024

OLX செயலி மூலம் மோசடி; சைபர் கிரைம் எச்சரிக்கை

image

OLX செயலி மூலமாக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதாக இணையத்தில் பொய்யான பதிவேற்றம் செய்து விளம்பரப்படுத்தி நம்ப வைத்து ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகிறது. எனவே இந்த போலி விளம்பரங்களை கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு ஹெல்ப்லைன் 1930 மற்றும் சைபர் கிரைம் இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.

News July 10, 2024

8ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜூலை 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் www.dge.tn.gov.in இ-சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

சிறுபான்மையினருக்கு கடனுதவி; ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில், கைவினை தொழில், கல்வி ஆகியவற்றுக்கு, கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. தேவை உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டில் நேற்றிரவு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!