Chengalpattu

News July 13, 2024

12 மணிநேரம் ரயில் சேவை ரத்து

image

பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 14) சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. காலை 7.45 மணிமுதல் இரவு 7.45 மணிவரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், எழும்பூரில் இருந்து – தாம்பரம், எழும்பூர் – செங்கல்பட்டு, எழும்பூர் – திருமால்பூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 13, 2024

செங்கல்பட்டு: 520.40 மி.மீ. மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்கழுக்குன்றத்தில் 130 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு – 48, திருப்போரூர் 60, கேளம்பாக்கம் – 50.40, திருக்கழுக்குன்றம் – 130, மாமல்லபுரம் – 87, மதுராந்தகம் – 97, செய்யூர் – 21, தாம்பரம் – 27, ஆக மொத்தம் 520.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 65.05 மழை பதிவாகியுள்ளது.

News July 13, 2024

தலைமைச் செயலாளர் இன்று ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கையாக கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் மதுரப்பாக்கம் ஓடை ரூ.25 லட்சத்தில் ஆகாயத்தாமரை, குப்பை கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை இன்று தமிழக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொள்கிறார்.

News July 13, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை 9.30 மணிவரை மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே வெளியே செல்லும் பொதுமக்கள் அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம்.

News July 13, 2024

மருத்துவமனையில் இருந்து 5 பேர் டிஸ்சார்ஜ்

image

கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சித்தாமூர் அருகே மழுவங்கரணை பகுதியில் கள்ளச்சாரயம் அருந்திய 5 பேர் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், குறும்பரை பகுதியைச் சார்ந்த மதுரை, மணி, பெருமாள், ராதாகிருஷ்ணன் மற்றும் ஐய்யனார் ஆகிய 5 பேரும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்.

News July 13, 2024

குழந்தை திருமணத்தை தடுக்க புகார் அளிக்கலாம்

image

18வயது நிறைவடையாத பெண்கள், குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்துவது குழந்தைகள் திருமண தடைச்சட்டப்படி, பெருங்குற்றமாகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் , குழந்தை திருமணம் தொடர்பாக 1098 மற்றும் 181 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என குழந்தை நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

செங்கல்பட்டு பகுதியில் கனமழை 

image

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று இரவு(12.7.24) இடி, மின்னலுடன்  கன மழை பெய்தது. அதன்படி, பரனூர், ஆத்தூர், திம்மாவரம், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது. இம்மழையால், சில பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்துள்ளது.

News July 12, 2024

செங்கல்பட்டு ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில வருவாய்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

News July 12, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News July 12, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி துறை கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த ஊரக வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!