Chengalpattu

News July 15, 2024

காட்டாங்கொளத்தூரில் சாமி சிலைகள் கண்டெடுப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சியில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. முதலில் சிவலிங்கமும் அதையடுத்து இரண்டு நந்தி சிலைகள் மற்றும் பலிபீடம் ஆகியவை கிடைத்தன. இதுகுறித்து வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பல வருடங்களுக்கு முன்பு சித்தர் ஒருவர் அந்த இடத்தில் கோவில் கட்டி வழிபட்டதாக கூறப்படுகிறது.

News July 15, 2024

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்

image

புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் ஏ.சி நடுநிலைப்பள்ளி வேங்கைவாசல் ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் இன்று மாணவர்களுக்கு இப்பள்ளியில் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.

News July 15, 2024

காலை உணவு திட்டம் துவக்கி வைப்பு

image

தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம் அரசுப் பள்ளிகளில் விரிவுப்படுத்தப்படுகிறது. அதன்படி, வண்டலூர் பகுதியில் உள்ள வில்லியம்ஸ் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் அரசு அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

செங்கல்பட்டு: இப்பகுதியில் நாளை மின்தடை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரி, மறைமலைநகர், நாவலூர், படூர் துணை மின்நிலையத்தில் நாளை(16.7.24) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், மேலே கொடுக்கப்பட்டுள்ள துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.

News July 14, 2024

தமிழக வடக்கு மண்டல ஐஜி வீடியோ கான்பரன்ஸ் கூட்டம்

image

தமிழக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திடீரென நேற்று ஜூலை 13 வருகை தந்தார். இதனையடுத்து, தமிழக காவல் துறை வடக்கு மண்டலத்தில் கீழ் செயல்பட்டு வரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் ஆகிய 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

News July 14, 2024

காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டில் பயிர் காப்பீட்டு திட்டம் ‘அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்’ என்ற காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2024 – 25ல், சம்பா, சிறப்பு மற்றும் ராபி மற்றும் பருவ பயிருக்கு காப்பீடு செய்யலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை உணவு திட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 வட்டாரங்களில் உள்ள 55 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 3,402 மாணவர்கள் பயன்பெறும் வகையில் நாளை முதல் (15ம் தேதி) காலை உணவு திட்டம் தொடங்கப்படவுள்ளது. வண்டலுார் ஊராட்சி, வில்லிஸ் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் அருகே ஏ.சி நடுநிலைப்பள்ளி வேங்கைவாசல் ஊராட்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொடங்கி வைக்க உள்ளார்கள்.

News July 14, 2024

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: எம்டிசி

image

சென்னை கடற்கரை – பூங்கா நகர் ரயில் தடத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடப்பதால், கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் 12 மணி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று எம்.டி.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 14, 2024

ஜூலை 15 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை

image

செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த சேர்க்கைக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர். தற்போது, விண்ணப்பிக்க கால அவகாசம், ஜூலை 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

News July 14, 2024

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மழை

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 1 மணி வரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!