Chengalpattu

News July 16, 2024

செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகள் மாபெரும் போராட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனே வழங்குதல், மாதம் 35 கிலோ அரிசிக்கு AAY கார்டு சட்டபடி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News July 16, 2024

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்பாட்டம்

image

இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் இன்று ஜூலை(16)  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில், நலவாரிய பணிகள் அனைத்திற்கும் தொழிற்சங்க சான்று கட்டாயமாக்குதல், மனு கொடுத்த 30 நாட்களில் அனைத்து பண பயன்களையும் வழங்கிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

News July 16, 2024

தாம்பரம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலச்சந்தர் நியமனம்

image

சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலச்சந்தர் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 10 மாவட்ட ஆட்சியர்கள் மாநகராட்சி ஆணையர்களை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருந்த அழகுமீனா குமரி ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News July 16, 2024

தினக்கூலி அடிப்படையில் வேலை வழங்கிய ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பு ஊதியத்தில் RCH பணியாளராக பணிபுரிபவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், வழங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் பரணிதரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News July 16, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 408 மனுக்கள் பெறப்பட்டன

image

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற (ஜூலை 15) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 408 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News July 16, 2024

ஈபிஎஸ் உடன் மாவட்ட செயலாளர் சந்திப்பு

image

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் இருப்பவர் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ஆறுமுகம். இவர் நேற்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது பிறந்த நாளை முன்னிட்டு மனைவியுடன் சந்தித்து ஆசி பெற்றார். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

News July 16, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி பயிலும் 4 பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,00,000 மதிப்பீட்டில் டெய்சி பிளேயர் (Daisy Player) மற்றும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பயனாளிக்கு ரூ.9,350 மதிப்பீட்டில் சக்கர நாற்காலி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் (ஜூலை 15) நேற்று பயனாளிகளுக்கு வழங்கினார்.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <<-1>>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

இந்த ரயில்கள் எழும்பூர் வரை செல்லாது : தெற்கு ரயில்வே

image

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை காரைக்குடியில் இருந்து இயக்கப்படும் பல்லவன் ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News July 15, 2024

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் குறைதீர் முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. இதில் ஓய்வூதியம், அடையாள அட்டை, தொழில் தொடங்குவதற்கான கடன் உதவி உள்ளிட்டவைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

error: Content is protected !!