India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லை. குறிப்பாக, சென்னையில் இருந்து வேடந்தாங்கல் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வேடந்தாங்கல் வரும் பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே, சென்னையில் இருந்து வேடந்தாங்கலுக்கு செல்ல பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில், தீபாவளி கொண்டாட்டத்திற்காக மின் விளக்குகள் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மரக்காணத்தைச் சேர்ந்த செல்வம் (40) 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் குகன் (52). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் அய்யனார் (54) என்பவரை அழைத்துக் கொண்டு காரில், சோத்துப்பாக்கம் – வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில், ராமாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கன்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் சென்ற இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குகன் உயிரிழந்தார். அய்யனார் படுகாயமடைந்தார்.
சென்னை கலைஞர் அரங்கத்தில், இன்று (அக்.27) திமுக இளைஞரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ‘என் உயிரினும் மேலான’ எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில், செங்கல்பட்டைச் சேர்ந்த இளம்பெண் சிவரஞ்சனி கலந்து கொண்டு தனது அசாதாரணமான பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினார். இறுதியில், 2ஆவது இடத்தை பிடித்து அசத்தினார். இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்பவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று (அக்.27) முதல் நவ.2ஆம் தேதி வரை செங்கல்பட்டு டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
மேலமையூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (45). இவரது மகள் தர்ஷினி (9), கடந்த 24ஆம் தேதி இரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது. அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கி உள்ளது.
மாமல்லபுரம், குழிப்பாந்தண்டலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு பயிலும் 7 மாணவிகள் திருப்போரூர் தண்டலத்தில் உள்ள தனியார் மையத்தில் கம்யூட்டர் பயிற்சிக்கு நேற்று மாலை சென்றனர். வீடு திரும்ப ஷேர் ஆட்டோவில் மாமல்லபுரம், பண்டிதமேடு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென ஆட்டோ கவிழ்ந்தது. இதில் மாணவிகளுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
நன்மங்கலம் பகுதியில் இருந்து 12 பேருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நேற்று இரவு 11:50 மணிக்கு வேன் ஒரு புறப்பட்டது. கார்த்திக் (25) வாகனத்தை இயக்கினார். தாம்பரம் வேளச்சேரி சாலை சந்தோஷபுரம் அருகே அதிகாலை 3 மணிக்கு லாரியை முந்தி செல்ல முயன்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 11 பேர் காயம் அடைந்தனர். ஓட்டுனர் சுய நினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காட்டாங்கொளத்தூர், மண்ணிவாக்கம் ஊராட்சி சண்முகா நகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்பாபு (47). இவர், புதிதாக ஆயில் கம்பெனி கட்டடம் கட்டி வருகிறார். இக்கட்டடம் கட்டுவதற்கு அயனாவரத்தைச் சேர்ந்த டேனியல் (68), என்பவரிடம் ஒப்பந்தம் விட்டுள்ளார். டேனியேல் நேற்று முன்தினம் வேலைகளை பார்வையிட்டபோது 12 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.