India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆண்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகள் உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தமிழக ஒப்பந்த சுகாதார துறை ஊழியர்கள், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே இன்று (ஜூலை 30) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்டோர், சாலை மறியலில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை செங்கல்பட்டு போலீசார் தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரனூரில் உள்ள துலுக்கானத்தம்மன் கோயிலில், ஆடிமாதத்தை முன்னிட்டு நேற்று கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இதில், லோகநாதன் (50), கரகம் சுமந்து சென்றுள்ளார். அப்போது அஜித் என்பவர், ஊரில் கரகம் எடுக்க ஆளில்லையா?, எதற்காக வெளியூரில் இருந்து கரகம் சுமக்க ஆள் கொண்டு வருகிறீர்கள் என கேட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால், லோகநாதனை சரமாரியாக குத்தியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், இன்னர் வீல் கிளப் பீனிக்ஸ் (Inner Wheel Club Phoenix) என்ற சங்கம் விலங்கு தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் நேற்று (ஜூலை 29) ஒரு நாள் மட்டும் 29 புலிகளை தத்தெடுத்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ரூ.72,500-க்கான காசோலையை, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் டாக்டர். எச்.திலீப்குமாரிடம் வழங்கினார்.
செங்கல்பட்டில் நாளை (ஜூலை 31) பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திரிசூலம், பல்லாவரம் கிழக்கு, சேலையூர், ஐ.ஏ.எஃப். சாலை, ரிக்கி கார்டன், ஏ.எல்.எஸ். நகர், ரமணா நகர், சக்ரா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
தாம்பரம் மாநகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கபடவில்லை என்ற தகவல் பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் மன்ற நிகழ்வுகளை கண்காணித்து செய்தி சேகரிக்க தனி அறை தயாராகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில் இந்த அறையில் பத்திரிகையாளர்கள் அமர்ந்து செய்தி சேகரிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் என்பிகே காம்ப்ளக்ஸ் உரத்தை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம். மேலும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் கிடைக்கிறது. இதனை எண்ணெய்வித்து பயிர்களுக்கு பயன்படுத்துவதால் மகசூல் அதிகரித்து எண்ணெய் சத்து அளவு அதிகரிக்கிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் அடைந்த 30 பயனாளிகளுக்கு ரூ.17,000 விதம் ரூ.5,10,000 மதிப்பிலான ஈம சடங்கு நிதி உதவியினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை காலை இரும்புலியூரில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குகிறார். மேலும் வருகிற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்ற மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ஷெகாவத், சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் மாமல்லபுரத்தில் பசுமை சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்த ஊக்குவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதேபோல் நீலகிரி மாவட்டமும் சுற்றுலா தலங்கள் பசுமை சுற்றுலா தலங்களாக ஊக்குவிக்கப்படும் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.