India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் – நாகர்கோவில் இடையே இன்று (30.10.24) சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இன்று மதியம் 3.45 மணிக்கு சிறப்பு ஏசி ரயில் (06109) புறப்படும், மறுமார்க்கத்தில் அக்.31 காலை 8.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 9.55க்கு தாம்பரம் வரும் என செய்தி வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு ஆண்டு படித்து வரும் 100 மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு நேற்று (29.10.2024) வெள்ளை அங்கி அணிவித்து மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைவர் சிவசங்கர், முதல்வர் முதல்வர் அனிதா மற்றும் மருத்துவர்கள், மாணவ, மாணவிகள் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
மதுராந்தகம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் சத்யமூர்த்தி, தவெக மாநாடு பாதுகாப்பு பணி சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்நிலையில், சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யமூர்த்தி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவரது குடும்பத்தினருக்கு, ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு, பல்லாவரத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹரிசை சந்திக்க பல்லாவரம் வந்தபோது ஹரீஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்து தப்பிய பெண், போலீசாரிடம் தஞ்சம் அடைந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம், செய்யூர் தாலுகா பகுதி விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள், கால்நடைகளால் பாதிக்கப்படுகின்றன. இதனால், சாகுபடி முழுமையாக செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே இதை தவிர்க்க, அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடை அடைக்கும் பட்டிகள் ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கான நடவடிக்கை எடுக்க ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் இன்று (29.10.2024) காலை 10:00 மணிக்கு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ச. அருண் ராஜ் வெளியிட உள்ளார். அதேபோல் ஒவ்வொரு கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர்கள் பட்டியலை வெளியிட உள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில், மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர். பயணிகள் வசதிக்காக தமிழகத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் அக்.29, 30 ஆகிய தேதிகளில் தற்காலிகமாக பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் துறையின் சார்பில் மாதாந்திர ஆய்வு கூட்டம் ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் நேற்று (28.10.2024) நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் வெ.நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் பங்கேற்றனர்.
சிறுசேரி செல்வா நகரைச் சேர்ந்தவர் ஜானி. இவரது வீட்டில் கார்பெண்டர் வேலை செய்தவர் ரவி (60). மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த இவர், ஜானியின் மகளை நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அச்சிறுமி தாயாரிடம் தெரிவித்தார். தாயார் சிட்லபாக்கம் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு செய்து கார்பெண்டர் தேடி வருகின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சி, பல்லாவரம் தொகுதியின் 14ஆவது மாநாடு நேற்று குரோம்பேட்டையில் நடந்தது. இந்த மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், ம.தாமோதரன் தொகுதி குழு செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொகுதி குழு உறுப்பினர்களாகபிபாகரன், ரேவதி, ஹேமக்குமார், நரசிம்மன், சிந்தன், விஜயலக்ஷ்மி, ராஜேந்திரன், சந்திரன், டெல்லிபாபு, குமார், சுந்தர்ராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தேர்வாகினர்.
Sorry, no posts matched your criteria.