India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் வரும் செப்.1ஆம் தேதி முதல் 5 – 7% வரை கட்டணம் உயர்கிறது. இதனால், ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதலாக செலுத்த வேண்டியது வரும். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு, லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள அம்மா உணவகம் அருகே, அடையாளம் தெரியாத மூதாட்டி நேற்று சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர போலீசார், விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அகில உலக மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு சினேகிதி வளர்இளம் பெண்கள் அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் எழுதிய பதாதைகள் ஏந்திய படி இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மணிகூண்டு, ரயில் நிலையம் புதிய பேருந்து வழியாக சென்று நிறைவு பெற்றது.
செங்கல்பட்டு புறவழிசாலை போக்குவரத்து பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற்று வருவதால் செங்கல்பட்டு புறவழிசாலை பகுதிகளான புலிப்பாக்கம், பரனூர், மகேந்திராசிட்டி உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் முதல் பரனூர் வரை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டு வாகனங்களை அனுப்பி வைக்கின்றனர்.
செயின்ட் தாமஸ் மவுன்ட் – பூந்தமல்லி சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்றும், நாளையும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. போரூரில் இருந்து மவுன்ட் சாலை வழியாக கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் ராணுவ சாலை சந்திப்பில் இருந்து இடது புறமாக திரும்பி புஹாரி ஹோட்டலுக்கு எதிரே உள்ள போர் கல்லறை சாலையில் செல்ல வேண்டும்.
தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன்(62). இவர், அப்பகுதியிலுள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை, கோவிலில் பூஜை செய்துவிட்டு ஈ.சி.ஆர். சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. இதில், தாமோதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கடற்கரையில் இன்றிரவு 10.40 மணிக்கு, நாளை அதிகாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை – எழும்பூர் இடையே பகுதியளவில் ரத்து. சென்னை கடற்கரையிலிருந்து இன்றிரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் ரயில்கள், கடற்கரை – எழும்பூர் இடையே பகுதியளவில் ரத்து. இந்த ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். ஷேர் பண்ணுங்க.
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டிலிருந்து இன்றிரவு 8.45, 9.10, 10.10, 11 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே பகுதியளவில் ரத்து. திருமால்பூரிலிருந்து இன்றிரவு 8 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள், எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே பகுதியளவில் ரத்து.
தாம்பரத்தில் விநாயகர் சதுர்த்தி ஒரு வாரம் திருவிழா நடைபெற உள்ளது. இதை ஒட்டி இந்து புரட்சி முன்னணி சார்பில் ஒரு வாரம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி நிறுவனத் தலைவர் எம் கே எஸ் சந்திரகுமார் நேற்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) தலைவர் ஜி கே வாசனை சந்தித்து விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்து அதற்கான அழைப்பிதழை கொடுத்தார்.
பல்லாவரம் வேல்ஸ் தனியார் பல்கலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றும் 1000 நல்லாசிரியர்ளுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் வேந்தர் ஐசரி கணேஷ், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.