India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால், ‘மிகத்திறமை வாய்ந்த சிறந்த கவிஞர்’ என்று போற்றப்பட்ட முற்போக்கு எழுத்தாளரும், தமிழ் தேசிய தத்துவக்கவிஞர் என்று அழைக்கப்படும் கவிஞர் தணிகைச்செல்வம் இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, சிட்லப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அமைச்சர் தா.மோ அன்பரசன் அஞ்சலி செலுத்தினார்.
பாரதியார் தினம், குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, மாநில அளவில் விளையாட்டு, தடகள போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு போட்டிகள் அண்மையில், தாம்பரத்தில் நடந்தது. இதில் மொத்தம் 20 பேர் பங்கேற்றனர். மாமல்லபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் தேவராஜ் சூப்பர் சீனியர் பிரிவில், 10ஆம் வகுப்பு மாணவர் மகேஷ்வரன், 9ஆம் வகுப்பு மாணவி சீமா சீனியர் பிரிவில் முதலிடம் பெற்றனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வெயில் அடித்து வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட, ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் ஸ்கிட் ஸ்டீர் லோடேர் (skid steer loaders) எனும் வாகனத்தை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், துணை மேயர் கோ.காமராஜ் மண்டல குழு தலைவர்களான ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, இந்திரன், காமராஜ், ஜெயா பிரதீப் சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளர். சென்னை அடுத்த கோவளம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை இதனை நிகழ்த்தி காட்டியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த இவர், தற்போது இந்த புதிய சாதனையை படைத்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கும் இதுபோல் மலையேற பிடிக்குமா என்று கமெண்டில் சொல்லுங்க.
தமிழக முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுகவினர் வரும் நவம்பர் 16, 17, 23, 24 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்கள் சேர்த்திடும் பணியில் மும்முரமாக ஈடுபட வேண்டும் என காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுகவினர் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணிவாக்கம் – வண்டலுார் சாலையில் நேற்று மதியம் பாலூரில் இருந்து கருங்கற்களை ஏற்றிக்கொண்டு, வண்டலுார் நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, 30 வயதுடைய வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குடிபோதையில் சாலையை திடீரென கடக்க முயன்றுள்ளார். அப்போது, லாரியின் சக்கரம் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த அபிஷேக் (20), பொத்தேரி வள்ளியம்மை கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று நள்ளிரவு 2:15 மணிக்கு வேலை முடித்துவிட்டு கல்லூரியில் இருந்து ஜி.எஸ்.டி. சாலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து, ரயில்கள் வாயிலாக சென்னையில் இருந்து 2 நாட்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து நேற்று முன்தினம் 2,092 பேருந்துகளும் 369 சிறப்பு பேருந்துகளும், நேற்று 2,125 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தாம்பரம் – நாகர்கோவில் இடையே இன்று (30.10.24) சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இன்று மதியம் 3.45 மணிக்கு சிறப்பு ஏசி ரயில் (06109) புறப்படும், மறுமார்க்கத்தில் அக்.31 காலை 8.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 9.55க்கு தாம்பரம் வரும் என செய்தி வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.