India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து செப்.3-ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3-இல் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தாராததை கண்டித்து செம்பாக்கம் காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்காக நீர் நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் http://tnesevai.tn.gov.in/ என்ற இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், வி.ஏ.ஓ, நீர்வளத்துறை ஆகிய அலுவலகங்களில் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் லிடியா(59). இவர், நேற்று முன்தினம் மாலை தனது 13 வயது மகன் மற்றும் 2 தோழிகளுடன் பொத்தேரியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு ரயிலில் வந்துள்ளார். பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கிய லிடியா, தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, எழும்பூரில் இருந்து வந்த விரைவு ரயில் அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் தனது மகன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம், அடுத்தா ண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கிளாம்பாக்கம் செல்லும் மக்களின் வசதிக்காக மால் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளன.
ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் தீபிகா பிரியதர்ஷினி(27). மருத்துவரான இவருக்கு, இவருடன் படித்த கடலூரைச் சேர்ந்த சுரேஷ் குமார்(27) என்பவர் தொடர்ந்து செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பி பாலில் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்குமாரை நேற்று திருவள்ளூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில், செம்மஞ்சேரி பகுதியில் செமி கண்டெக்டர் டெக்னாலஜியில் ரூ.250 கோடி செலவில் 1,500 வேலை வாய்ப்புகளை உருவாக்க ‘ஆர் அன்ட் டி மைக்ரோ சிப்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில், சிறுசேரி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சிப்காட்டில் 100 வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ.450 கோடி செலவில் நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதவிர, சென்னை தரமணியிலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில், செங்கல்பட்டில் ரூ.400 கோடி செலவில் 500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எலக்ட்ரோலைசர் உற்பத்தி மற்றும் ஹைட்ரஜன் கரைசல் அமைப்புகளுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.
மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(16) மற்றும் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன்(16) இருவரும், சேலையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இருவரும், நேற்று மாலை பள்ளிக்கரணை நோக்கி மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது, பைக் நிலைத் தடுமாறி பாலத்தின் சுவற்றில் மோதியது. இதில், பின்னால் அமர்ந்திருந்த யோகேஸ்வரன் பாலத்தின் கீழே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கல்பட்டில் நாளை (ஆக.31) பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது. இதனால், ஆலந்தூா், பரங்கிமலை, வாணுவம்பேட்டை, குரோம்பேட்டை, தாம்பரம் மேற்கு, பெருங்களத்தூர், நெமிலிச்சேரி, மாடம்பாக்கம், சேலையூர், செம்பாக்கம், கடப்பேரி, திருவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல்பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.