Chengalpattu

News September 3, 2024

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி கிணற்றில் சடலமாக மீட்பு

image

படப்பைம் ஆதனுார் பிரதான சாலையில் உள்ள மகாலட்சுமி நகரில், சாலையோர கிணற்றில் இறந்த நிலையில் ஆண் சடலம் மிதந்தது. தகவலறிந்த மணிமங்கலம் போலீசார், ஒரகடம் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து உடலை மீட்டனர். போலீசார் விசாரணையில், அவர் ஆதனுார் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ரவுடி தனசேகர்(27) என்பதும், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு 4 மாதங்களுக்கு முன் ஜாமீன் பெற்று வெளியே வந்ததும் தெரிந்தது.

News September 3, 2024

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் (தனி), செய்யூர் (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அருண்ராஜ் நேற்று வெளியிட, சப்-கலெக்டர் நாராயண சர்மா பெற்றுக்கொண்டார்.

News September 3, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, மாவட்டத்தின் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் குடை மற்றும் ரெயின் கோர்ட்டை மறக்காமல் எடுத்து செல்லுங்கள். மழை பெய்யுமா? கமெண்டில் சொல்லுங்க.

News September 3, 2024

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை

image

சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ.6000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையம் மூலம் 30.09.24 குள் விண்ணப்பிக்கலாம். மேலும் 04427238477, 7401703461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

செம்பரம்பாக்கம் ஏரியில் 1.2 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பு உள்ளது

image

செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் மூலம் சென்னை மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. தற்போது 4.88 டி.எம்.சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. 3.6 டி.எம்.சி. கொள்ளளவுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 1.2 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

News September 2, 2024

அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளி சடலமாக மீட்பு

image

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர் 50 வயதான தம்பிரான். இவர் இன்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் நோயாளி சடலமாக மீட்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மருத்துவமனை கட்டடத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 2, 2024

பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இம்முகாம், வரும் 5, 6 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044-2742 6020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என செங்கல்பட்டு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

image

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்வர் சௌந்தரராஜன்(37) எலக்ட்ரிஷன் வேலை செய்து வரும் இவருக்கு மனைவி, 7 மற்றும் 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இதில், 5 வயது சிறுமிக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த தாய், தாம்பரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தந்தையை தேடி வருகின்றனர்.

News September 2, 2024

பெண்களுக்கான சைக்கிள் போட்டி: தமிழகம் முதலிடம்

image

கேலோ இந்தியா அமைப்பின் தென் மண்டல பிரிவின் சார்பில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு இடையே பெண்களுக்கான சைக்கிள் போட்டி திருப்போரூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 2 நாட்களாக நடைபெற்று வந்த இப்போட்டியில், தமிழக அணி முதல் இடத்தை பிடித்தது. அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News September 2, 2024

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி: போலீசார் விசாரணை

image

சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாளத்தில், நேற்றிரவு 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு பயணியர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், வாலிபர் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அவர் யார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!