Chengalpattu

News November 1, 2024

செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாக, இன்று (நவ.1) செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 1, 2024

தீபவாளி கொண்டாட்டம் கோலாகலம்

image

செங்கல்பட்டில் நேற்று பல்வேறு பகுதிகளில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து பாரம்பரிய முறையில் கொண்டாடினர். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பலகாரங்கள் செய்து, அறுசுவை உணவு சமைத்து, வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன் கொண்டாடினர். இதனால், இரவில் சென்னை ஜொலித்தபடி காணப்பட்டது. நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாடினீர்கள்?

News November 1, 2024

போலீசாரை தாக்கிய இருவர் கைது: ஒருவருக்கு வலை வீச்சு

image

குரோம்பேட்டை நேரு நகரில், வடமாநிலத்தவர் சிலர் கட்டுமான பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த சபரி (32), அஜய் (21), சஞ்சய் (23) ஆகியோர் அவர்களிடம் தகராறு செய்துள்ளனர். ரோந்து போலீசார் தமிழன்பன், சுந்தர்ராஜ் ஆகியோர் இருதரப்பையும் தடுத்துள்ளனர். போலீஸ் என்றும் பாராமல் மூவரும் சேர்ந்து போலீசை தாக்கினர். இதில் சபரி, அஜய் இருவரும் கைது செய்யப்பட்டனர். சஞ்சய் தலைமறைவாக உள்ளார்.

News November 1, 2024

45 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் – use in chennai also

image

போக்குவரத்து துறை சார்பில் கடந்த 2 நாட்களாக உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய ஆம்னி பேருந்துகளில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்றது. வரி செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக விதிமீறி இயக்கப்பட்ட 45 பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News October 31, 2024

செங்கல்பட்டில் ஒருசில இடங்களில் மழை

image

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து, மேகமூட்டத்துடன் மாவட்டத்தின் ஒருசிலர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், பட்டாசு வெடிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இடி, மின்னலுடன் கூடிய கனமழை அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News October 31, 2024

புதுமணப்பெண் தற்கொலை: சார் ஆட்சியர் விசாரணை

image

மறைமலைநகர் அருகே உள்ள சட்டமங்களம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவரது மனைவி தனவதி (25). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனவதி, நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களே ஆவதால், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, செங்கல்பட்டு சார் ஆட்சியர் விசாரித்து வருகிறார்.

News October 31, 2024

மன உளைச்சலில் ஒப்பந்ததாரர் உயிரிழப்பு

image

தாம்பரம் மாநகராட்சியில், ஒப்பந்ததாரராக இருந்தவர் ராமதாஸ் (40). இவர், தாம்பரம் மாநகராட்சியில் 3 மற்றும் 5ஆவது மண்டலங்களில் பல கோடிக்கு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். பணிகள் முடிந்தும் இதுவரை மாநகராட்சி சார்பில் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி என்பதால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதனால் மன உளைச்சல் இருந்த ராமதாஸ் நேற்று நண்பகல் உயிரிழந்தார்.

News October 31, 2024

செங்கல்பட்டு மக்களே கவனமாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட செங்கல்பட்டு மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 31, 2024

சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்த மக்கள்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. மக்கள், சிறப்பு பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர்.

News October 30, 2024

செங்கல்பட்டில் ஆண்களை விட பெண்கள் அதிகம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அருண்ராஜ் நேற்று (அக்.29) வெளியிட்டார். இப்பட்டியலில், மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 13 லட்சத்து 33,858 ஆண் வாக்காளர்கள், 13 லட்சத்து 61,508 பெண் வாக்காளர்கள், 478 மூன்றாம் பாலினர் என மொத்தம் 26 லட்சத்து 95,844 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்களை விட 27,650 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.