India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் தங்களது செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்திய விபரம் (ம) கால்நடை மருத்துவரின் விபரங்களை, tcmcpublichealth.inPetAnimalRegister என்ற இணையதளத்தில், அவற்றின் உரிமையாளர்கள் பதிவேற்றம் செய்து, உரிமச் சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள மாநகராட்சி தெரிவித்துள்ளது. வழங்கப்பட்ட தேதியிலிருந்து, ஓராண்டு காலத்திற்கு உரிமச் சான்றிதழ் செல்லுபடியாகும்.
▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ▶️ இதற்கு Any Degree அல்லது B.E./B.Tech, MBA, M.Sc, MCA, M.E./M.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் ▶️ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும் ▶️நவ.3ஆம் தேதிக்குள் www.iob.in/Careers என்ற இணையதளத்தில் விண்ணபிக்க வேண்டும் ▶️SHARE பண்ணுங்க!
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன், இபிஎஸ்-க்கு கெடு விதித்து இருந்தார். இதனையடுத்து செங்கோட்டையனை பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட திருப்போரூர் தெற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாஸ்கன் (எ) பார்த்தசாரதியை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மக்களே இன்று 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே <
தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உயிரிழந்தவர்கள், ஒரே வாக்காளர் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள இரட்டை பதிவு, குடி பெயர்ந்தவர்கள் என 30 ஆயிரம் பேரை நீக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் மனு அளித்தார். செங்கல்பட்டு நகர கழக செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார்,நகரத் துணைச் செயலாளர் விநாயகம் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்க கூட்ட அரங்கில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகங்களிலும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தான, ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வேளாண்மை இயக்குனர் திறன் மேம்பாட்டு கழகம், கிராந்தி குமார், மற்றும் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் இன்று 1நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. +2 முதல் டிகிரி வரை படித்த, 20 முதல் 30 வயது வரை,தமிழ் மொழி பேச,எழுதபடிக்கத் தெரிந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-27426020, 9486870577 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். +2 முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <
Sorry, no posts matched your criteria.